Advertisment

Tamil News Today: 4 நாட்கள் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Tamil News LIVE Updates, Petrol price Today, Russia-Ukraine War Updates, today Sri Lanka crisis Pakistan political crisis 12 April 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today:  4 நாட்கள் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாகை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், சென்னைக்கு திரும்ப ஏதுவாக ஏப்ரல் 17ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

ஜோ பைடன், பிரதமர் மோடி உரையாடல்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடல் நடத்தினார். இதுகுறித்து விளக்கமளித்த மோடி, விரைவில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும். ரஷ்ய அதிபர் புதினை, உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு வலியுறுத்தினேன். தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலை வருத்தமளிக்கிறது. உக்ரைனின் புச்சா நகரில் நடந்த தாக்குதலில் 400 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. புச்சா தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளவும் இந்தியா வலியுறுத்தியது என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த மோடி கூறினார்.

சசிகலாவுக்காக யாரும் குரல் கொடுக்கமாட்டார்கள்!

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை கேட்டு 1.50 கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. சசிகலாவுக்காக யாரும் குரல் கொடுக்கமாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியின்போது கூறினார்.

&t=9s

Tamil News LIVE Updates:

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும்  நிகழ்வு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி!

ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாகவும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை வேண்டுமென்றே மத்திய அரசு புறக்கணிப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்திய கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு!

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், காலியாக உள்ள இடங்களை உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைனில் எந்த தொழில்நுட்ப பாடப்பிரிவு மற்றும் ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதே மட்டத்தில் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும்.. ராஜபக்சே!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும். மக்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் என மகிந்த ராஜபக்சே கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:02 (IST) 12 Apr 2022
    நியூயார்க்கின் புரூக்ளினில் சுரங்கப்பாைதையில் துப்பாக்கிச்சூடு

    அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள சுரங்கப்பாதை நிலையத்தில் இன்று காலை ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் தெரிவித்து்ளளது. சன்செட் பார்க் சுற்றுவட்டாரத்தில் உள்ள 36 வது தெரு நிலையத்தில் கடுமையாக புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள சுடப்பட்ட மற்றும் வெடிக்காத சாதனங்களைக் கண்டறிந்ததாக நியூயார்க் நகர தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இதில், 13 பேர் காயமடைந்ததாக தீயணைப்புத் துறை கூறியுள்ளது.


  • 21:42 (IST) 12 Apr 2022
    விருதுநகர் பாலியல் வழக்கு : ஜாமின் கோரி ஜுனைத் முகமது மனுதாக்கல்

    விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்fகில் குற்றம்சாட்டப்பட்ட ஜுனைத் முகமது ஜாமின் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்


  • 21:41 (IST) 12 Apr 2022
    டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை

    இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

    ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி கடிதம் அளித்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறையில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்


  • 21:39 (IST) 12 Apr 2022
    டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை

    இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

    ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி கடிதம் அளித்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறையில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்


  • 20:18 (IST) 12 Apr 2022
    வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் - முதல்வர் ஸ்டாலின்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று கூறியுள்ளார்.


  • 20:17 (IST) 12 Apr 2022
    உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் - ரஷ்ய அதிபர்

    இலக்கை அடையும்வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் எனவும், உக்ரைனின் புச்சா பகுதியில் நடந்த தாக்குதல்களுக்கு ரஷ்யா காரணமல்ல என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.


  • 19:31 (IST) 12 Apr 2022
    புதுக்கோட்டை குளித்தலை அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்ட அனுமதி

    புதுக்கோட்டை மற்றும் குளித்தலையில் இயங்கிவரும் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி' எனப் பெயர் சூட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குளித்தலை அரசு கலைக்கல்லூரியை 2022-23 ம் கல்வியாண்டு முதல் டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி என பெயர் சூட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  • 18:49 (IST) 12 Apr 2022
    பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்

    பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

    ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு

    அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும், இந்தியாவுடன் அமைதியான நல்லுறவையே பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.


  • 18:38 (IST) 12 Apr 2022
    புதுக்கோட்டை, குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளுக்கு பெயர் மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை

    புதுக்கோட்டை, குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளுக்கு பெயர் மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குளித்தலை அரசு கலைக் கல்லூரியை 2022-23ஆம் கல்வியாண்டு முதல் 'டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி' எனப் பெயர் சூட்ட அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு 'கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி' எனப் பெயர் சூட்ட அனுமதி அளித்துள்ளது.


  • 17:57 (IST) 12 Apr 2022
    அரசு ஊழியர்கள் பெறும் ஈட்டிய விடுப்பு சம்பளம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

    அரசு ஊழியர்கள் தங்களது விடுமுறையை சரண்டர் செய்து, பெறும் ஈட்டிய விடுப்பு சம்பளம் தற்காலிகமாக நிறுத்திவைத்து தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளது.


  • 17:57 (IST) 12 Apr 2022
    பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்ற விழாவில் குண்டுவீச்சு

    பிகார் முதல்வர் நிதீஷ்குமார், பங்கேற்ற விழாவில், மேடையின் அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால், அங்கே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. குண்டு வீசியது தொடர்பாக காவல் துறையினர் ஒருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  • 16:57 (IST) 12 Apr 2022
    சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அறிவிப்புகள்

    ஈரோடு,கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

    உதகமண்டலம் நகருக்கு மாற்றுப் பாதை ரூ70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், பசுமலையில் ரூ.26.33 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படும்

    தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் தரத்தை நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

    போன்ற அறிவிப்புகளை பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்


  • 16:37 (IST) 12 Apr 2022
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு

    அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களுக்கும் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்


  • 16:26 (IST) 12 Apr 2022
    புதுக்கோட்டை சிறுவன் பலி; விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிதி உதவி

    புதுக்கோட்டை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரூ.25,000 நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் விஜய் சமீபத்தில் பேசியிருந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் நிதி உதவி அளித்துள்ளது


  • 16:10 (IST) 12 Apr 2022
    உ.பி மேல்சபை தேர்தல் முடிவுகள்; பெரிய வெற்றியை நோக்கி பாஜக

    பாஜக பெரிய வெற்றியை நோக்கிச் செல்லும் நிலையில், உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கான இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “எம்.எல்.சி தேர்தலில் பாஜகவின் அமோக வெற்றி, மதிப்பிற்குரிய பிரதமரின் திறமையான வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் மாநில மக்கள் தேசியவாதம், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியுடன் இருப்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

    27 சட்ட மேலவை இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக அரை டஜன் இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மற்ற இடங்களில் முன்னிலையில் உள்ளது என்று செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக பெரும் வெற்றியை நோக்கிச் சென்றுள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்கிழமை கூறியது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது அம்மாநில மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


  • 15:55 (IST) 12 Apr 2022
    கல்வி ஊக்கத்தொகைக்கு ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு

    கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3 முதல் 6ஆம் வகுப்பு வரை படிக்கும் கிராமப்புற மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வசதியாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது


  • 15:53 (IST) 12 Apr 2022
    கரூர் மாநகராட்சி தியேட்டர்களில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் நடிகர் விஜயின் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது என கரூர் மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்


  • 15:25 (IST) 12 Apr 2022
    இந்தி திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது – அண்ணாமலை

    இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது. இந்தியை கட்டாயம் திணிக்க மாட்டோம். பாஜக அதை செய்யாது. மோடியும் அமித் ஷாவும் அதை விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்


  • 15:14 (IST) 12 Apr 2022
    மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு 2010ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டதுதான் - அண்ணாமலை

    மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு 2010ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டதுதான். இது திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது என கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்


  • 14:53 (IST) 12 Apr 2022
    2 ஆண்டுகளுக்கு பின் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நாள்

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்


  • 14:39 (IST) 12 Apr 2022
    கச்சதீவை ஒப்படைக்க வாய்ப்பு இல்லை - டக்ளஸ் தேவானந்தா

    கச்சதீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புகள் இல்லை. சீனா வலையில் இலங்கை சிக்கவில்லை. இலங்கை தமிழர்கள், அகதிகளாக தமிழகம் செல்வது தற்காலிகமே என இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


  • 14:13 (IST) 12 Apr 2022
    8 வழிச்சாலை; நிலைப்பாடு மாறவில்லை - அமைச்சர் எ.வ.வேலு

    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தில் பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


  • 13:55 (IST) 12 Apr 2022
    அயோத்தியா மண்டபம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடையில்லை

    சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடையில்லை; ராம சமாஜம் என்ற அமைப்பு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. பக்தர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 52 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தகவல்


  • 13:55 (IST) 12 Apr 2022
    அயோத்தியா மண்டபம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடையில்லை

    சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடையில்லை; ராம சமாஜம் என்ற அமைப்பு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. பக்தர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 52 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தகவல்


  • 13:43 (IST) 12 Apr 2022
    கடனை செலுத்த அவகாசம் கோரும் இலங்கை

    இலங்கை அரசு பெற்ற வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவது தற்போதைய சூழலில் மிகவும் சவாலானது, சாத்தியமற்றது. நிலைமை சீரான பின் கடனை திருப்பி செலுத்துவோம் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீர சிங்கே அறிவிப்பு


  • 13:36 (IST) 12 Apr 2022
    அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது - சசிகலா

    தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. தமிழக மக்களை என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் என சசிகலா தெரிவித்தார்.


  • 13:24 (IST) 12 Apr 2022
    திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் காயம்

    ஆந்திரா திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் காயமடைந்தனர். ஒரே நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால், கூட்டத்தை போலிசார் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.


  • 13:17 (IST) 12 Apr 2022
    உத்தர பிரதேசம்: காசி மேலவை தேர்தலில் பாஜக தோல்வி!

    உத்தர பிரதேச மாநில மேலவை தேர்தலில் காசி தொகுதி பாஜக வேட்பாளர் சுதாமா படேல் தோல்வி அடைந்தார். சுயேட்சை வேட்பாளர் அன்னாபூர்ணா சிங் 4,234 வாக்குகள் பெற்று வெற்றி.


  • 13:16 (IST) 12 Apr 2022
    ரஷ்யாவிலிருந்து குறைந்த அளவிலே எண்ணெய் இற்ககுமதி - எஸ் ஜெய்சங்கர்

    வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம், ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஐரோப்பாவை விட ரஷ்யாவிலிருந்து இந்தியா குறைந்த எண்ணெயை இறக்குமதி செய்வதாக தெரிவித்தார்.


  • 13:14 (IST) 12 Apr 2022
    இந்தியாவின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் அமெரிக்கா

    அரசாங்கம், காவல்துறை, சிறை அதிகாரிகளால் இந்தியாவில் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சில சமீபத்திய சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கண்காணித்து வருகிறதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.


  • 13:00 (IST) 12 Apr 2022
    பல மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை மாநகரில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 12:51 (IST) 12 Apr 2022
    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2ஆம் தேதி கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வர மீனவர்களை வரும் 18ஆம் தேதி வரை மீண்டும் சிறையில் அடைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:39 (IST) 12 Apr 2022
    மக்கள் பிரச்னையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் - முதல்வர்

    மத்திய அரசிடம் பேசி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்த வானதி சீனிவாசனின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.


  • 12:39 (IST) 12 Apr 2022
    மக்கள் பிரச்னையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் - முதல்வர்

    மத்திய அரசிடம் பேசி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்த வானதி சீனிவாசனின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.


  • 12:19 (IST) 12 Apr 2022
    கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயார்-மா.சு

    உருமாறிய XE வைரஸ் பரவலை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை எடுத்த நடவடிக்கை என்ன? என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்விக்கு தமிழகத்தில் எந்த வடிவில் கொரோனா ஊடுருவினாலும், அதை எதிர்கொள்ள தயார் என்று தற்போதைய சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.


  • 12:02 (IST) 12 Apr 2022
    ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து - நீடிக்கும் மீட்புப் பணி

    ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 3வது நாளாக தொடர்கிறது. நேற்று வரை 36 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 10 பேர் மீட்பு இன்னும் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


  • 11:43 (IST) 12 Apr 2022
    டிப்ளமோ முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

    பட்டயப்படிப்பை முடித்த மாணவர்கள் நேரடியாக பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்கை நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.


  • 11:35 (IST) 12 Apr 2022
    திருவாரூரில் தீப்பிடித்து எரிந்தது 3 இருசக்கர வாகனங்கள்

    திருவாரூர் குடவாசல் அருகே அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


  • 11:26 (IST) 12 Apr 2022
    குற்றங்களின் பிறப்பிடமாக உருவெடுக்கும் ஆன்லைன் சூதாட்டம் - பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்!

    குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


  • 10:56 (IST) 12 Apr 2022
    என்னை யாராலும் விரட்ட முடியாது.. சசிகலா

    தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை’ அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் என சசிகலா பேச்சு!


  • 10:55 (IST) 12 Apr 2022
    ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை!

    தமிழ்நாடு அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி அங்கு அரசு கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில்’ எம்.எல்.ஏ கேள்விக்கு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதிலளித்தார்.


  • 10:43 (IST) 12 Apr 2022
    சிபிஐ-யிடம் சிக்கிய நீரவ் மோடி கூட்டாளி!

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி, கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை, சிபிஐ எகிப்தில் இருந்து இந்தியா அழைத்து வந்தது.


  • 10:10 (IST) 12 Apr 2022
    காமன்வெல்த் போட்டி 2026 !

    2026ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 09:48 (IST) 12 Apr 2022
    துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 09:47 (IST) 12 Apr 2022
    பாஜக போராட்டம்.. 75 பேர் மீது வழக்குப்பதிவு!

    அயோத்தியா மண்டபத்தை அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதை கண்டித்து நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் உள்பட 75 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 09:14 (IST) 12 Apr 2022
    ரயில் மோதி 5 பேர் உயிரிழப்பு!

    ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் அருகே தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில்’ 5 பேர் உயிரிழந்தனர்.


  • 09:14 (IST) 12 Apr 2022
    மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

    அமைச்சர், எம்.எல்.ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராக இருந்தாலும், எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் இருக்க வேண்டும். கடமை தவறாதீர்கள், கண்ணியத்தை இழக்காதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • 08:44 (IST) 12 Apr 2022
    அமெரிக்கா கண்காணித்து வருகிறது!

    இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் கூறினார்., மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உடனான சந்திப்பின்போது இவ்வாறு அவர் கூறினார்.


  • 08:41 (IST) 12 Apr 2022
    மீன்வளத்துறை அறிவுறுத்தல்!

    மீன்பிடி தடைக்காலம் தொடங்கவுள்ளதையொட்டி, அனைத்து விசைப்படகுகளும் வரும் 14ம் தேதி இரவுக்குள் கரை திரும்பிட வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.


  • 08:41 (IST) 12 Apr 2022
    இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தாவிய எம்.பி!

    இலங்கையில் சுதந்திரக் கட்சியின் 14 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், எம்.பி சாந்த பண்டார’ சுயாதீன அணியில் இருந்து திடீரென இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தாவினார். இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்.


Chennai Tamilnadu Pakistan Srilanka Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment