ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து கடலுக்கு சென்ற 16 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது.
ஜெ. மரணம்.. சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது!
ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டது. குறுக்கு விசாரணை நிறைவு பெறும் பட்சத்தில், அடுத்த கட்டமாக அறிக்கையை தயாரிக்கும் பணி நடைபெறும் என ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu News LIVE Updates:
காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 13 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தி.நகர் துணை ஆணையராக இருந்த ஹரி கிரண் பிரசாத் குமரி எஸ்.பி ஆகவும், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி சுகுனா சிங் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி ஆகவும், போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனர் ஜெயலட்சுமி நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்.பி ஆகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
காற்றுமாசு.. டாப் 15 பட்டியலில் 10 இந்திய நகரங்கள்!
உலகில் காற்றுமாசு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IQAirஎன்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் என டாப் 15 பட்டியலில், 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
- 22:39 (IST) 23 Mar 2022பஞ்சாப் முதல்வர் பிரதமர் மோடி நாளை சந்திப்பு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை, சந்திக்க உள்ளார்
- 20:23 (IST) 23 Mar 2022கரூர் மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
கரூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி நிலுவைத் தொகை காரணமாக 15 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும் எனறு கரூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
- 19:43 (IST) 23 Mar 2022பிப்லோபி பாரத் கேலரியை காணொலி வாயிலாக திறந்து வைத்த பிரதமர் மோடி
மேற்குவங்கம், கொல்கத்தாவில் உள்ள பிப்லோபி பாரத் கேலரி புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கேலரியை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
- 19:21 (IST) 23 Mar 2022எம்ஜிஆரின் சிலையை மத்திய அரசு நிறுவ வேண்டும் - அதிமுக எம்பி தம்பிதுரை
மாநிலங்களவையில் ரயில்வே துறை பணிகள் தொடர்பான விவாதத்தில் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்ஜிஆரின் சிலையை மத்திய அரசு நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 19:20 (IST) 23 Mar 2022திருச்செந்தூர் கோவில் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனத்தால் சாதாரண பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை தெரிவித்துள்ளது.
மேலும் கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிகளை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கோவிலில் சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்குவதில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 18:39 (IST) 23 Mar 2022உங்களில் ஒருவன் புத்தகத்தைப் படித்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
உங்களில் ஒருவன் புத்தகத்தைப் படித்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். “உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி!
— M.K.Stalin (@mkstalin) March 23, 2022
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது! - 18:16 (IST) 23 Mar 2022நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 17:32 (IST) 23 Mar 2022ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி துறையில் ஜிடிபி அளவு குறைந்து வருகிறது - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேச்சு: “மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நேசமற்ற அரசாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி துறையில் ஜிடிபி அளவு குறைந்து கொண்டே வருகிறது” என்று கூறினார்.
- 17:29 (IST) 23 Mar 2022நளினிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஐகோர்ட்டில் மனு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தென் சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்தழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், பேரறிவாளனுக்கு மட்டும்தான் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. அந்த உத்தரவு மற்ற கைதிகளுக்கு பொருந்தாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 17:07 (IST) 23 Mar 2022குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இதுவரை 9,10,644 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- 16:46 (IST) 23 Mar 2022நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் மோதி முதியவர் உயிரிழப்பு
சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
- 16:36 (IST) 23 Mar 2022வேலூரில் பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு; 4 பேர் கைது
வேலூரில் நள்ளிரவில் பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது செல்போன், பணம் மற்றும் நகையை பறித்து சென்றதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
- 16:26 (IST) 23 Mar 2022ஜம்மு - காஷ்மீரில் 100% கொரோனா தடுப்பூசி - நிர்மலா சீதாராமன்
ஜம்மு - காஷ்மீரில் மக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
- 16:17 (IST) 23 Mar 2022ஊர்காவல்படை வீரருக்கு ரூ1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
காவல்துறை உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்ட ஊர்காவல்படை வீரருக்கு ரூ1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை, புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் ஊர்காவல் படைவீரராக பணியாற்றிய தணிகாச்சலம் என்பவர் தாக்கல் செய்த மனு மீது, தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
- 16:14 (IST) 23 Mar 2022மார்ச் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார். லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது
- 15:57 (IST) 23 Mar 2022கட்சியில் இருந்து யாரையும் இழக்க விரும்பவில்லை -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கட்சியில் இருந்து யாரையும் இழக்க விரும்பவில்லை, கட்சிக்கு எதிராக பேசியவர்கள், அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தெரிவித்தவர்கள், கட்சியின் கூட்டங்களில் பங்கேற்காமல், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்கம் செய்யாமல், விட்டு வைத்திருந்தேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்
- 15:43 (IST) 23 Mar 2022திருமணமான 5 வருடங்களுக்கு பிறகு தங்கம் கொடுப்பது, 'தாலிக்கு தங்கம்' திட்டம் கிடையாது - எ.வ.வேலு
திருமணமான பின் 5 வருடங்களுக்கு பிறகு தங்கம் கொடுக்கப்படும் என்பது 'தாலிக்கு தங்கம்' திட்டம் கிடையாது என அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் கூறியுள்ளார்
- 15:35 (IST) 23 Mar 2022தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழையாது - பொன்முடி
தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழையாது. நுழையவும் விடமாட்டோம். மாநில கல்விக் கொள்கை உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என சட்டப்பேரவையில் ஓபிஎஸ் எழுப்பிய கேள்விக்களுக்கு அமைச்சர் பொன்முடி இவ்வாறு பதிலளித்தார்
- 15:30 (IST) 23 Mar 2022கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக மக்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் - ஓபிஎஸ்
முல்லை பெரியாறு விவகாரத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுடைய கட்சிக்கு விசுவாசமாக இருப்பதுபோல் தமிழக மக்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் கூறியுள்ளார்
- 15:16 (IST) 23 Mar 2022தமிழக பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை - ஓபிஎஸ்
தமிழக பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கூறியுள்ளார். மேலும், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.6,230 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிலையில், எவ்வளவு நிவாரணம் பெறப்பட்டது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும் என்றும் பேரவையில் பட்ஜெட் பொது விவாதத்தில் ஒபிஎஸ் கூறியுள்ளார்
- 14:52 (IST) 23 Mar 2022அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ பணியின்போது முன்னுரிமை - மா.சு தகவல்
அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு, மருத்துவத் துறையில் பணி நியமனத்தின்போது முன்னுரிமை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
- 14:36 (IST) 23 Mar 2022ஜூன், ஜூலை மாதங்களில் பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் - AICTE அறிவிப்பு
ஆகஸ்ட் 1ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும், ஆகஸ்ட் 15க்குள் காலியிடங்களில் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
- 14:34 (IST) 23 Mar 2022வடபழனி முருகன் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
வடபழனி முருகன் கோயிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.ரூ15 லட்சம் மதிப்பிலான லட்டு, முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.முறையான உரிமம், ஆவணங்கள் இல்லாமல் பிரசாதம் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:00 (IST) 23 Mar 2022தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு எந்த விதத்தில் வந்தாலும் அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் க.பொன்முடி
தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு எந்த விதத்தில் நுழைய முயற்சித்தாலும், அதனை முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார். கல்லூரிகளில் இனி நுழைவுத் தேர்வு அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
- 13:45 (IST) 23 Mar 2022ஜெயக்குமார் மகளை கைது செய்ய கூடாது - உயர் நீதிமன்றம்
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
- 13:23 (IST) 23 Mar 2022அறங்காவலராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாக அறங்காவலராக நாசர் தலைமையில் நடிகர் சங்க அறக்கட்டளை செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றம்.
- 13:19 (IST) 23 Mar 2022ஜெ., மரணத்தில் ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு நேற்று உண்மை தெரிந்துள்ளது - சசிகலா
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு நேற்று உண்மை தெரிந்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கப்பட்டபோது இது நல்லது என்றுதான் சொன்னேன். என் மீது மதிப்பு இருக்கிறது என ஓ.பி.எஸ் உண்மையை கூறியிருக்கிறார் என சசிகலா பேட்டியளித்துள்ளார்.
- 13:19 (IST) 23 Mar 2022ஜெ., மரணத்தில் ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு நேற்று உண்மை தெரிந்துள்ளது - சசிகலா
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு நேற்று உண்மை தெரிந்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கப்பட்டபோது இது நல்லது என்றுதான் சொன்னேன். என் மீது மதிப்பு இருக்கிறது என ஓ.பி.எஸ் உண்மையை கூறியிருக்கிறார் என சசிகலா பேட்டியளித்துள்ளார்.
- 12:59 (IST) 23 Mar 2022பேரிடர் மேலாண்மை சட்ட உத்தரவுகளை திரும்பப் பெற அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்ட உத்தரவுகளை திரும்ப பெற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- 12:50 (IST) 23 Mar 2022முல்லை பெரியாறு பிரச்சினைக்கு புதிய அணையே தீர்வாகும் - கேரளா
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கூறி வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் அதிக அளவிலான நீர் தேக்கி வைக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும் கேரள அரசு வாதம் செய்துள்ளது.
- 12:16 (IST) 23 Mar 2022தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை -வெளிநடப்பு செய்த அதிமுக
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தது அதிமுக. தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 11:57 (IST) 23 Mar 2022நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் - டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் காந்தி சிலையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
- 11:52 (IST) 23 Mar 2022தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது - முதல்வர்
அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் தற்போது 110 விதியின் கீழ் பேசி வரும் முதல்வர் அறிவித்துள்ளார்.
- 11:44 (IST) 23 Mar 2022முதலாம் அண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகள் துவக்கம்
முதலாம் அண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை துவங்க அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 11:29 (IST) 23 Mar 2022தீ விபத்து ரூ. 5 லட்சம் நிவாரணம்
செகந்திராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு
- 11:01 (IST) 23 Mar 2022மதிமுக பொதுக்குழுக் கூட்டம்!
சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் வைகோ முன்னிலையில் தொடங்கியது. அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். புறக்கணித்த நிர்வாகிகள் மதிமுகவை திமுக உடன் இணைக்க கோரிக்கை விடுத்தனர்.
- 11:01 (IST) 23 Mar 2022ஸ்டாலின் துபாய் பயணம்!
முதல்வராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக, தொழில் கண்காட்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் செல்கிறார். அவருடன் உதயநிதி உள்ளிட்டோரும் துபாய் செல்கின்றனர்.
- 10:56 (IST) 23 Mar 2022காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
- 10:40 (IST) 23 Mar 2022இந்தியாவின் சாதனை..
இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக ரூ.30 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. ஏற்றுமதி சாதனைக்கு காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
India set an ambitious target of $400 Billion of goods exports & achieves this target for the first time ever. I congratulate our farmers, weavers, MSMEs, manufacturers, exporters for this success.
— Narendra Modi (@narendramodi) March 23, 2022
This is a key milestone in our Aatmanirbhar Bharat journey. localgoesglobal pic.twitter.com/zZIQgJuNeQ - 10:36 (IST) 23 Mar 2022முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது!
உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கில் கேரள அரசின் பதிலுக்கு, தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுக்கிறது. அணை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. அணை பாதுகாப்பாகவே உள்ளது. ஆய்வு செய்ய சர்வதேச குழு தேவையில்லை. ஒன்றிய நீர்வள ஆணையத்தின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு அரசின் குழுதான் அணையை ஆய்வு செய்யும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- 10:35 (IST) 23 Mar 2022ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க ஏற்பாடு!
பேரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த உறுப்பினர்கள் கேள்விகளுக்கு, வரும் நிதியாண்டில் 20க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க திட்டம் இருப்பதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
- 09:57 (IST) 23 Mar 2022பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. கமல்ஹாசன் சாடல்!
தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு- கமல்ஹாசன் சாடல்!
தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே...
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2022 - 09:55 (IST) 23 Mar 2022அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். மத்திய அரசின் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
- 09:54 (IST) 23 Mar 2022இலங்கையில் இருந்து 10 பேர் தமிழகம் வருகை!
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்துள்ளர்.
- 09:53 (IST) 23 Mar 2022மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்!
சொத்து வரி கட்டாத 200க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள்’ ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நோட்டீஸை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கம் வரும் 26ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளனர்.
- 09:48 (IST) 23 Mar 2022மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்!
சொத்து வரி கட்டாத 200க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள்’ ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நோட்டீஸை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கம் வரும் 26ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளனர்.
- 09:13 (IST) 23 Mar 2022கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு!
சென்னை பல்கலை. கீழ் இயங்கும், 131 கல்லூரிகளில், இளங்கலை பட்டப்படிப்பில் தலா, ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
- 09:13 (IST) 23 Mar 2022டிஎன்பிஎஸ்டி குரூப் 2, 2ஏ தேர்வு.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
டிஎன்பிஎஸ்டி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். குரூப் 2-இல் 116 பதவிகள், குரூப் 2ஏ-வில் 5413 பதவிகள் என மொத்தம 5529 பணிகளுக்கான தேர்வு மே-21ஆம் தேதி நடைபெறுகிறது.
- 09:12 (IST) 23 Mar 2022ஆஷ்லே பார்டி ஓய்வு!
3 கிராண்ட்ஸ்டாம் பட்டங்களை வென்றவரும், உலகின் நம்பர் 1 டென்னில் வீராங்கனையுமான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீராங்கனை ஆஷ்லே பார்டி டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- 09:12 (IST) 23 Mar 2022மரக்குடோனில் தீ விபத்து.. 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் அருகே, போயிக்கூடா பகுதியில் மரப்பொருட்கள் குடோனில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- 08:31 (IST) 23 Mar 2022லாலு பிரசாத் யாதவுக்கு உடல் நலக்குறைவு!
உடல் நலைக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்!
- 08:30 (IST) 23 Mar 2022டெல்லிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக, மின்னஞ்சலில் வந்த மிரட்டலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 08:30 (IST) 23 Mar 2022உக்ரைன் போர்.. ஐ.நா. சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது!
உக்ரைன் மீதான ரஷ்ய போர் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின்’ அவரசரகால சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது.
- 08:30 (IST) 23 Mar 2022மீனவர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்!
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 56 இந்திய மீனவர்கள், கடற்படையின் தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.