Petrol and Diesel Price: ரஷ்யா- உக்ரைன் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மீண்டும் 110 டாலரை தாண்டியுள்ளது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அந்தவகையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43- காசுகளுக்கும், டீசல் ரூ.94.47-காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.03, டீசல் விலை ரூ.3.04 உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!
மக்களவையில் நடப்பாண்டிற்கான நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உக்ரைன் போர்ச் சூழலே விலையேற்றத்திற்கு காரணம். நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.1 கோடியாக உயர்வு என நிதி மசோதா மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி’ புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்குகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரில் காண 25% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகம் ஆகின்றன.
Tamil Nadu News LIVE Updates:
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கூடத்தை பார்வையிட்ட ஸ்டாலின்!
“#DubaiExpo2020 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் ‘இசைப் புயல்’ @arrahman அவர்கள் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ ஆல்பத்தை காண்பித்தார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 25, 2022
தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார் pic.twitter.com/xnsuoAD2Az
துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று அவரது இசைக்கூடத்தை பார்வையிட்டார். அவருடன் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, கிருத்திகா ஆகியோரும் உடன் சென்றனர். ஏ.ஆர். ரஹமான், தனது புதிய ஆல்பமான “மூப்பிலா தமிழே..தாயே” பாடலை ஸ்டாலினுக்கு போட்டு காண்பித்தார்.
உலகின் மிக உயர்ந்த ஒளித்த தமிழ் பாடல்!
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது.
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! pic.twitter.com/Thu2C7kPB2
உலகின் மிக உயர்ந்த, துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடலை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட போது!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று அண்டை நாடான போலந்திற்கு தனது பயணத்தை முடித்தபோது உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் அருகே மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளன என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. “எல்விவ் அருகே இந்த சக்திவாய்ந்த வெடிப்புகள் நடந்துள்ளன. இது தொடர்பாக நகர சபை அதிகாரி இகோர் ஜின்கேவிச் பேஸ்புக் பதிவில் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துபாயில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ஷெராப் குழும நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 500 கோடி முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைத்திடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு செப்டம்பர் 2022 வரை நீட்டித்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, “சமூகத்தின் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மீதான அக்கறை மற்றும் உணர்திறனைக் கருத்தில் கொண்டு” செப்டம்பர் 2022 வரை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 21-ஆம் தேதி விபத்துக்குள்ளான போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலியான 120 பேரின் டி.என்.ஏ. அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது – சீன அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா 3 நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகை தரவுள்ளார். தொடர்ந்து அவர் ஏப்ரல் 2ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் வாரணாசிக்கும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா, “இந்திய மக்கள் மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் விலைகள் 137 நாட்களாக மாற்றாமல் 5 மாநில தேர்தல்களில் மக்களின் வாக்குகளைப் பெற்ற பிறகு அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் “தினசரி விலையேற்றம் மற்றும் எரிவாயு சிலிண்டர், பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் விலைகள் கடுமையான உயர்வு ஆகியவை மோடி அரசாங்கத்தின் கட்டளை “மக்களை கொள்ளையடிக்கவும், அரசின் கஜானாவை நிரப்பவும்” முக்கியத்துவம் கொடுப்பதை குற்றிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற உள்ளன
திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்ற தேவஸ்தான இலவச பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் பயணிக்காத நிலையில் 4 ஊழியர்கள் மட்டுமே பயணித்துள்ளனர். பேருந்து 2-வது மலைப்பாதையில் சென்றபோது திடீரென புகைமூட்டம் ஏற்பட்டதால், பேருந்தை நிறுத்திய ஊழியர்கள் இஞ்சினை திறந்து பார்த்துள்ளனர். அப்போது இஞ்சினில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
பணிநிரவல் ஆணை பெற்ற உபரி பட்டதாரி ஆசிரியர்கள், அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் பணியாற்றினால் முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தலைமை ஆசிரியர்களும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பணியிட மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வரும் 28, 29ஆம் தேதிகளில் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும். இரு நாட்களில் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது. பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது
தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என துபாய் தொழிலதிபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தமிழ்நாடு – துபாய் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன உலகளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழ்நாட்டை மேம்படுத்துவதே குறிக்கோள். தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் உள்கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துபாயில் தொழில் முனைவோர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
உலகின் அழகான நகரமான துபாய் நகரம் வணிகத்திலும் சிறந்து விளங்குகிறது. ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபாய் விளங்குகிறது. என துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ1,600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்து இட்டுள்ளது. இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடிக்கு ஒப்பந்தம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும். 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்தார்.
துபாயில் ஐக்கிய அமீரக முதலீட்டாளர்களை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மார்ச் 26 முதல் 30 வரை மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த பயணத்தின் இருதரப்பு வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
World Press Photo அமைப்பின் புகைப்பட கலைஞர் சர்வதேச விருதுக்கு, மதுரையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருதை பெறும் முதல் தென்னிந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.
கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
உக்ரைன் போரில் இதுவரை 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் டெலிகிராம் செயலியில் மெசேஜ் வாயிலாக தெரிவித்துள்ளது.
விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம். ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் இருக்கும் ஹரிஹரன், மாடசாமி உள்பட 4 பேர் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
குஜராத் ஜாம்நகரில் உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்க உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார் மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் ஆரம்பமானது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ. 75,800 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.
மேற்கு வங்கம் பிர்பூம் வன்முறை சம்பவத்தில் விசாராணையை துவங்கியது சி.பி.ஐ.
விருதுநகர் பாலியல் சம்பவத்தில் கைதான 8 பேரின் வீடுகளில் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்துள்ளது.
6 கவுன்சிலர்களை கொண்ட அதிமுகவுக்கு 9 வாக்குகள் பதிவானதால் குழப்பம் ஏற்பட்டதால் மதுரை, திருமங்கலம் நகராட்சி மறைமுக தேர்தலில் திமுக – அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றார்.
துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்.
அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வரும் 31ம் தேதி மாலை அல்லது ஏப்ரல் 1ம் தேதி காலையில் டெல்லி திரும்ப உள்ளார். இந்தியா திரும்பியது, பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்
டெல்லி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கரூர், புலியூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தல், போதுமான உறுப்பினர்கள் வராததால் மீண்டும் ஒத்திவைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதேபோல், திமுக கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால், தென்காசி, குற்றாலம் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் வெடித்த நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 8, திமுக 6, சுயேட்சை ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,660 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவுக்கு 16,741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் 31வது நாளாக நீடிக்கிறது. ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்கியதில், உக்ரைன் ராணுவ கட்டளை மையம் தகர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும். நிலம் கையகப்படுத்த மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10. 7 சதவீதம் உயர்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவியிடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது.
துபாய் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார். pic.twitter.com/84lJGVdg6s
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 25, 2022
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக 5வது மாநில நிதி ஆணையத்தின் மூலம் ரூ.614 கோடி, மத்திய நிதி ஆணையத்தின் கீழ் ரூ.799 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி மற்றும் பதிவுத்துறையில் ரூ. 13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.