Advertisment

சென்னை லாட்ஜில் பெட்ரோல் குண்டு வீச்சு: காரணம் என்ன? போலீஸ் விசாரணை

சென்னை வடபழனியில் இயங்கும் தனியார் விடுதியில் மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
Aug 27, 2022 08:49 IST
New Update
சென்னை லாட்ஜில் பெட்ரோல் குண்டு வீச்சு: காரணம் என்ன? போலீஸ் விசாரணை

சென்னை வடபழனியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 38). இவர், அதே பகுதியில் 21 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, தீ வைத்து விடுதியின் வரவேற்பு அறையில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் விடுதியை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Advertisment

பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் விடுதியின் கண்ணாடிகள் நொறுங்கியது. மரப்பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பின்னர் அங்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது அங்கு தங்கியிருந்தவர்களுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment