பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
கோவை பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்யப்பட்டனர்.
Advertisment
தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநகர அமைப்பாளரான நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (30), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோபால் (எ) பாலன் (37), நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த கவுதம் (எ) கவுட்டயன் (28) ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை, தலா ரூ.1000 அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 427 (சொத்துக்களை சேதப்படுத்துதல்), 285 (தீ வைத்து மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துதல்), மற்றும் 153 (ஏ) (இரு சமூகத்தினரிடையே பகைமையை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisment
Advertisements
பெரியாருக்கு எதிரான கருத்துகளை எச்.ராஜா வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே இந்த சம்பவம் நடத்தப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil