scorecardresearch

இன்றைய பெட்ரோல்-டீசல் விலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பெட்ரோல்-டீசல் விலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 104.76 அடியாக உள்ளது. அணையில் நீர்வரத்து 1,099 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 71.14 டிஎம்சியாக உள்ளது.

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவு 105 அடியாக உள்ளது. நீர்மட்டம் 83.17 அடியாகவும் நீர் வரத்து 706 கன அடியாகவும் உள்ளது. 705 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நீர் இருப்பு 17.42 டிஎம்சியாக உள்ளது.

பெட்ரோல் விலை நிலவரம்..

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலை அப்படியே தொடர்கிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

மிதமான மழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Beast Movie Release LIVE Updates: வெளியானது விஜய்யின் பீஸ்ட்.. திரையரங்குகளில் குவிந்த விஜய் ரசிகர்கள்.. விடிய விடிய கொண்டாட்டம்!

தங்கம் விலை நிலவரம்..

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,901 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் 4,900க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு சவரன் ரூ.39,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று 8 ரூபாய் அதிகரித்துள்ளது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,346 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஒரு சவரன் தங்கம் ரூ.8 அதிகரித்து ரூ.42,768 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Petrol diesel auto fuel price today tamil nadu chennai coimbatore madurai tiruchirappalli tiruppur april