Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu news update: கொரோனா தொற்று வடமாநிலங்களில் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சசிகலாவிடம் விசாரணை
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக விசாரனை நடத்தினர்.
India News Update: இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டை முதன்மையானதாக கருதுங்கள்-பிரதமர் மோடி
முடிவு எடுக்கின்றபோது நாடுதான் முதன்மையானது என்ற அணுகுமுறையை பின்பற்றுங்கள் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிரதமர்மோடி அறிவுரை வழங்கினார்.
World news update: உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.
Sports Update: தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சிஎஸ்கே வெற்றி
மும்பை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி திரில் வெற்றியை ருசித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மின் பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து நிலக்கரி வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள மின்சாரத்துரை அமைச்சர் செந்தில் பாலாஜி சீரான மின் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன அனல் மின் நிலையங்களில் தற்போதைய மின் உற்பத்தி 4,000 மெகாவாட் மட்டுமே எனவும் கூறியுள்ளார்
சென்னை, கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன் மாணவர்களை பார்க்கும்போது எனக்கு 10 வயது குறைந்ததுபோல் இருக்கிறது என கூறியுள்ளார்
தமிழ்நாட்டு மக்களுக்காக உணவு, உறக்கம், நேரம் பார்க்காமல் நானும் அமைச்சர்களும் பணியாற்றி வருகிறோம் நானும், அமைச்சர்களும் ஓயாமல் பணியாற்றுவதால் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது எனவும் கூறியுள்ளார்.
சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
வாகன சோதனையின்போது கத்தி, கஞ்சா வைத்திருந்ததாக விக்னேஷ் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது விக்னேஷ் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
அரியலூர், உடையார்பாளையத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குப்புசாமி(86) என்ற முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவ பிறப்பித்துள்ளது.
இரட்டை இலை லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணைக்கு பின் பேட்டி அளித்த டிடிவி தினகரன் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன் சுகேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர் என்று கூறியுள்ளார்.
நெடுஞ்சாலை துறையில் இதற்கு முன்பு இருந்த கரும்புள்ளியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு அபராதத் தொகை வழங்கவும், ₨5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்துள்ளது.
“கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரண இடமாக இருக்கலாம்; எங்களுக்கு அது கோயில் போன்றது” என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கடந்த மார்ச் மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த 30 பயணிகளுக்கு செனனி மெட்ரோ ரயில் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு அறிவித்துள்ளது. பரிசு பெறுபவர்களின் பயண அட்டை எண்ணை வெளியிட்டது சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ரூ.41.3 லட்சம் செலவில் மாணவியர் தங்க அனுமதி அளிக்கப்படும்
மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 3 கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 ரயில்வே ரேக்குகள் தேவை. இருப்பினும் சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே ரயில்வேயால் வழங்கப்படுகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், சசிகலாவிடம் தனிப்படை போலீசார் 2வது நாளாக நடத்திய விசாரணை நிறைவடைந்தது. சென்னை தியாகராயர் நகர் வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை ஐ.ஜி., நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத் தலைமையில் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ஒரு வரலாற்று நிகழ்வு. இந்தியாவை பற்றி நன்கு அறிந்தவர் போரிஸ் ஜான்சன். இந்தியா, பிரிட்டன் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் போரிஸ் ஜான்சன் முக்கிய பங்காற்றியுள்ளார். வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களில் இரு தரப்புக்கும் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – பிரதமர் மோடி
அதிமுக அமைப்பு தேர்தலில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை, 2வது நாளாக இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது.
டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க, பள்ளிகளில் தனிமைப்படுத்தல் அறையை அமைக்க வேண்டும். மாணவர்கள் தங்களது உணவு மற்றும் புத்தகங்களை பகிர்ந்துகொள்ளக் கூடாது. கொரோனா அறிகுறிகள் குறித்து மாணவர்கள், பெற்றோரிடம் ஆசிரியர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டது.
பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
#watch I've the Indian jab (COVID19 vaccine) in my arm, and it did me good. Many thanks to India, says British PM Boris Johnson in Delhi pic.twitter.com/LiinvUCACB
— ANI (@ANI) April 22, 2022
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில், டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் விசாரணைக்கு ஆஜரானார்.
தமிழ்நாட்டில் நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால், அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2021ம் ஆண்டு ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய துப்பு துலங்கியுள்ளது: 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம். கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் ரொக்க பரிசு அறிவிக்கப்பட உள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கமளித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மின்வெட்டு தொடர்பான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை.தமிழ்நாடு அரசு முறையாக நிலக்கரி கொள்முதல் செய்யாததே மின்வெட்டுக்கு காரணம். அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி
தமிழ்நாட்டில் மின் நுகர்வு உயர்ந்து வருகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்பட்டது என மின்வெட்டு புகார்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம்…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை
கர்நாடக மாநிலம் உடுப்பி கல்லூரியில் ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள், ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் தேர்வை புறக்கணித்தனர்.
டெல்லி, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி உடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பு!
Prime Minister Narendra Modi and British PM Boris Johnson hold talks at Hyderabad House in Delhi(Source: DD) pic.twitter.com/fxCv5iiHg6
— ANI (@ANI) April 22, 2022
நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும். கிராமங்களை வலிமைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் வழங்க வேண்டும்- சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
கொரோனா தடுப்பூசிகளை மக்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000-க்கும் மேலான சான்றிதழ்கள் போலி என்பது அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தகவல்.
ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தனியார் துறையுடன் இணைந்து வீட்டுவசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். தனியாருடன் இணைந்து வீடுகளை கட்டினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவு விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் 2வது நாளாக இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. சென்னை, தி.நகரில் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
மே 8ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரணியன் தெரிவித்தார்.
டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அஞ்சலி. போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
சென்னை ஐஐடியில், 700 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி உறுதியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை, பிரதமர் மோடி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.
Prime Minister Narendra Modi receives UK PM Boris Johnson at Rashtrapati Bhavan pic.twitter.com/BbGjwOWDQU
— ANI (@ANI) April 22, 2022
திண்டுக்கல் சங்கரன்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.