By: WebDesk
Updated: September 18, 2018, 03:59:59 PM
Puducherry government imposes corona tax on petrol
Petrol Diesel Price : வாகன ஓட்டிகளை தினமும் தினமும் சோதித்து வரும் பெட்ரோலின் விலை இன்று உச்சத்தை தொட்டுள்ளது.
Petrol Diesel Price : மேலே மேலே செல்லும் பெட்ரோல் விலை:
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று (18.9.18) சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ. 85.41 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ. 78.10 ஆகவும் விற்கப்படுகின்றன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துக் கொண்டே செல்வது வாகன ஓட்டிகளை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு இது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.