பெட்ரோல் டீசல் விலை நிலவரம் : கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயைக் கடந்தது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறியது மத்திய அரசு என காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத் பந்த நடைபெற்றது. ஆனாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
கடந்த வாரம் அமீரகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. இதைப் பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க
இன்று பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த நான்கு நாட்களாக சென்னையில் பெட்ரோலின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசலின் விலை 29 காசுகள் குறைந்து 79.22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.