scorecardresearch

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. பெட்ரோல் விலை என்ன தெரியுமா?

Gold rate in Chennai: சென்னையில் இன்று (ஏப்ரல் 10) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,919-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. பெட்ரோல் விலை என்ன தெரியுமா?

Gold rate in Chennai: சென்னையில் இன்று (ஏப்ரல் 10) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,919-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,882 ஆக இருந்தது. இன்று கிராமுக்கு ரூ.37 அதிகரித்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் ரூ.39,352 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.39,056ஆக இருந்தது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.5,366 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.42,928க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 5 நாட்களாக தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்…

பெட்ரோல்-டீசல் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத உச்சம் ஆகும்.

இதையும் படியுங்கள்: ஹிந்தி தெரியாது… ஆனா தெரியும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் முரண் பேச்சு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 104.96 அடியாக உள்ளது. 623 கன அடி நீர் வரத்து காணப்பட்டது. 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது 71.41 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது.

வானிலை நிலவரம்…

தமிழகத்தில் இன்று ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று இந்திய வானிலைத் துறை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பரவலாக மழை

புதுச்சேரி நகரப்பகுதிகளான ராஜ்பவன், உப்பளம், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, மூலக்குளம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (ஏப்ரல் 9) பரவலாக மழை பெய்ததது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Petrol diesel rate today forecast weather report tn dam water level