Advertisment

Tamil news: நாகையில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News 29 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil news: நாகையில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

Petrol-Diesel price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Advertisment

Tamil Nadu News Updates: பெட்ரோல்-டீசல் விலை விவகாரத்தில் மாநிலங்கள் மீது குற்றம்சாட்டுவதா என்று பிரதமர் மோடி புகாருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முழு பூசணிக்காயை சோற்றில் மரைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தீ விபத்து தடுப்பு கட்டமைப்புக்கு ரூ.114 கோடி

தமிழக அரசு மருத்துவமனைகளில் தீ விபத்து தடுப்பு கட்டமைப்பு ஏற்படுத்த ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தை வாபஸ் பெற நடவடிக்கை-பிரதமர் அறிவிப்பு

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வட கிழக்கு மாநிலங்களில் முற்றிலுமாக வாபஸ் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்தார்.

எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

எல்.ஐ.சி.யின் 22 கோடி பங்குகளை விற்று ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசின் தனியார்மயமாக்கலின் ஓர் அங்கம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.

IPL update: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீழ்த்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 22:19 (IST) 29 Apr 2022
    நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்

    நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 533 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி கொண்டு செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.


  • 22:17 (IST) 29 Apr 2022
    தீயணைப்புத்துறை அலுவலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்


  • 22:16 (IST) 29 Apr 2022
    ஆளுனர் வருகை; நீலகிரி- கோத்தகிரி சாலையில் போக்குவரத்து தடை

    ஆளுநர் நாளை சாலை மார்க்கமாக உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை செல்வதால் நீலகிரி, கோத்தகிரி சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.


  • 19:09 (IST) 29 Apr 2022
    புதிய இந்தியா தனது முத்திரையைப் பதித்து விட்டுச் செல்கிறது - பிரதமர் மோடி

    உலகின் பல்வேறு இடங்களுக்கும் இந்திய மக்கள் எந்தவிதமான வளங்களும் இன்றி உழைப்பின் மூலம் வெற்றியை ஈட்டி உள்ளனர் - புதிய பரிமாணங்களை தொட்டு ஒட்டுமொத்த உலகிலும் புதிய இந்தியா தனது முத்திரையைப் பதித்து விட்டுச் செல்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


  • 19:08 (IST) 29 Apr 2022
    பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க மத்திய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


  • 19:07 (IST) 29 Apr 2022
    பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க மத்திய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


  • 18:51 (IST) 29 Apr 2022
    லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு சிறை

    கரூரில் கடந்த 2011ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தி பட்டா மாற்றம் செய்ய ₨3000 லஞ்சம் பெற்ற வழக்கு அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை, மற்றும் ₨20 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


  • 18:49 (IST) 29 Apr 2022
    குழந்தைகளுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை

    சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு தேசிய தொழிநுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுளள நிலையில், 12-17 வயதுடையவர்களுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


  • 18:48 (IST) 29 Apr 2022
    மே தினத்தில் ஜனநாயக காற்று வீசட்டும் - முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

    மே 1ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயக காற்று வீசட்டும், மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்தில் மலரட்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    ஏறத்தாழ 12 ஆயிரம் ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை திமுக கேட்டறிந்தது என்றும் கூறியுள்ளார்.


  • 18:42 (IST) 29 Apr 2022
    மே தினத்தில் ஜனநாயக காற்று வீசட்டும் - முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

    மே 1ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயக காற்று வீசட்டும், மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்தில் மலரட்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    ஏறத்தாழ 12 ஆயிரம் ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை திமுக கேட்டறிந்தது என்றும் கூறியுள்ளார்.


  • 17:22 (IST) 29 Apr 2022
    எலி பேஸ்ட்டுக்கு தடை விதிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்கொலை மரணங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்


  • 17:17 (IST) 29 Apr 2022
    சீனாவில் கல்வியை தொடர விரும்புபவர்கள் மே 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - இந்திய தூதரகம் அறிவிப்பு

    கொரோனா காலத்தில் நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனா திரும்பி கல்வியை தொடர விண்ணப்பிக்கலாம். சீனா திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள் மே 8ம் தேதிக்குள் இந்திய தூதரகம் வழங்கியுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    சீனா அனுமதி அளிக்கும் மாணவர்கள் சீன அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து செலவுகளையும் மாணவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு தெரிவித்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது


  • 17:01 (IST) 29 Apr 2022
    கோழி வளர்ப்பு பண்ணைக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கு

    போராட்டக்காரர்களிடமிருந்து கோழி வளர்ப்பு பண்ணைகளில் விடப்பட்டுள்ள கோழிகளை எடுக்கவும், கோழிக்குஞ்சுகளை விடவும் காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு தலைவர் லட்சுமணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கில், மனுவை பரிசீலித்து பிரச்சனைக்குரிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது


  • 16:45 (IST) 29 Apr 2022
    முரசொலி அறக்கட்டளை வழக்கு; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக விலக்கு

    முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்றும் பேசியது குறித்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது


  • 16:18 (IST) 29 Apr 2022
    தி.மு.க. வட்ட செயலாளர் கொலை வழக்கு; மேலும் 4 பேர் கைது

    சென்னை மடிப்பாக்கம், தி.மு.க., வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் புதிய திருப்பமாக, 188வது வட்ட திமுக துணை செயலாளர் குட்டி என்ற உமா மகேஸ்வரன் உள்பட முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


  • 16:01 (IST) 29 Apr 2022
    தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்பாடு - செந்தில் பாலாஜி

    தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்


  • 15:32 (IST) 29 Apr 2022
    மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

    இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் கோட்டபய ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசை அமைக்க அதிபர் கோட்டபய ராஜபக்சே ஒப்புதல் எனவும் தகவல் வெளியாகியுள்ளது


  • 14:52 (IST) 29 Apr 2022
    ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் - பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மரங்களை வெட்டாமல், நீர்நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது


  • 14:17 (IST) 29 Apr 2022
    ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

    இன்னுயிர் காப்போம்’ திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'வருமுன் காப்போம்' திட்டத்தில் பலனடைந்தோர் எண்ணிக்கை 8.64 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும், தமிழகத்தில் சாலை உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளது என்றும் மருத்துவத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


  • 13:40 (IST) 29 Apr 2022
    மே 3 வரை மழைக்கு வாய்ப்பு!

    தமிழகம், புதுச்சேரியில் மே 3 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, குமரி, நெல்லை மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 13:15 (IST) 29 Apr 2022
    இலங்கை மக்களுக்கு உதவ ரூ. 50 லட்சம்!

    இலங்கை மக்களுக்கு உதவ, தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதாக பேரவையில் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.


  • 12:34 (IST) 29 Apr 2022
    இலங்கை தமிழர்களுக்கு உதவுவதே அரசின் நிலைப்பாடு!

    இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு; மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; சிலிண்டர்கள் கிடைப்பது இல்லை- மு.க.ஸ்டாலின் !


  • 12:33 (IST) 29 Apr 2022
    இலங்கைக்கு 40,000 டன் அரிசி அனுப்பி வைக்க தயார்.. ஸ்டாலின்!

    இலங்கை மக்களுக்கு உதவ பிரதமர் மோடியிடம் நேரடியாகவும் கோரிக்கை வைத்துள்ளேன். அனுமதி அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை இலங்கைக்கு 40,000 டன் அரிசி, உயிர் காக்கும் மருந்துகள், 500 டன் பால் பவுடர் அனுப்பி வைக்க தயார். இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும- முதல்வர் மு.க.ஸ்டாலின்!


  • 11:58 (IST) 29 Apr 2022
    இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி வேண்டும்!

    இலங்கை தமிழர்களுக்கு உதவ, தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார். உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க அனுமதி தர கோரி தீர்மானம்.


  • 11:56 (IST) 29 Apr 2022
    விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு.. ஓபிஎஸ் கண்டனம்!

    திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தார். தங்கமணி உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். தங்கமணி குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.


  • 11:55 (IST) 29 Apr 2022
    விசாரணை கைதி மரணம்.. நடவடிக்கை எடுக்கப்படும்.. ஸ்டாலின்!

    திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணியின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்று உடன் நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்வர் ஸ்டாலின்!


  • 11:33 (IST) 29 Apr 2022
    பெங்களூருவில் செமிகண்டக்டர் மாநாடு!

    பெங்களூருவில் செமிகண்டக்டர் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.


  • 11:20 (IST) 29 Apr 2022
    மதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

    துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதிமுகவில் இருந்து சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார்.


  • 11:19 (IST) 29 Apr 2022
    ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா!

    சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 182 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  • 10:54 (IST) 29 Apr 2022
    இந்தி மொழியை ஏற்க மாட்டோம்-இயக்குநர் ரஞ்சித்

    இந்தி மொழியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.


  • 10:24 (IST) 29 Apr 2022
    டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாடு

    டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.


  • 10:10 (IST) 29 Apr 2022
    சிகரெட் வடிவில் சாக்லெட்-2 நிறுவனங்களுக்கு சீல்

    மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்த 2 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.


  • 09:45 (IST) 29 Apr 2022
    சென்னையில் தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹272 அதிகரித்து சவரன் ₹39,072க்கும், ஒரு கிராம் ₹4,884 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


  • 09:25 (IST) 29 Apr 2022
    3,377 பேருக்கு கொரோனா

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2,496 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், 60 பேர் உயிரிழந்தனர்.


  • 09:01 (IST) 29 Apr 2022
    சியூஇடி-க்கும் விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

    பொது நுழைவுத் தேர்வு(CUET)க்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மே 6-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 08:40 (IST) 29 Apr 2022
    சென்னை, கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை உயர்வு

    ஒரே நாளில் ரூ.10 அதிகரித்து கிலோ ரூ.50க்கு விற்பனை வரத்து குறைவு என்பதால் மேலும் தக்காளி விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment