பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட்.. முதல் சுற்றில் 6 இந்திய வீரர்கள் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், இந்திய ஓபன் ‘பி’அணியில் விளையாடிய ரவுனக் சத்வாணிஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மகளிர் ‘சி’ பிரிவில், ஹாங்காங் அணியை இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்தது. ஈஷா கார்வதே, நந்திதா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போடா உள்ளிட்டோர் 4 புள்ளிகளுடன் வெற்றி பெற்றனர்.
ஓபன் சி பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி, தெற்கு சூடான் வீரர் அஜேக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் குப்தா, குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தமிழக வீரர் குகேஷ் அறிமுக போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இதுவரை 6 இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
புதுக்கோட்டையில், சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி காணப்பட்டதையடுத்து, அந்த நபர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த மாதிரிகள் மருத்துவ சோதனைக்காக நாளை பூனேவிற்கு அனுப்பப்பட உள்ளது.
கனியாமூர் பள்ளி கலவரம் – போலீசார் மீது கற்கள் வீசியா பரமேஸ்வரன் கைது செய்யபப்ட்டுள்ளார். வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் விஜய், துரைப்பாண்டி, அய்யனார் ஆகிய மூவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். வீடியோ போட்டோ ஆதாரங்களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் திடீரென்று அறிவிக்க, சென்னை வந்த அந்நாட்டு வீரர்கள் 19 பேர் சொந்த நாடு திரும்பினர். செஸ் ஒலிம்பியாட் ஜோதி காஷ்மீருக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
செஸ் ஒலிம்பியாட் தொடரை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னையில் தங்கியிருந்த பாகிஸ்தான் செஸ் வீரர்கள் சொந்த நாட்டுக்கு புறப்பட்டனர்.
ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் வகிக்கும் பதவியை விவரிக்க தவறான வார்த்தையை பயன்படுத்தியதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது நாக்கு சறுக்கல் என்று நான் உறுதியளிக்கிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதையே ஏற்க வேண்டும்.”
காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தான் ‘ராஷ்டிரபத்தினி’ என்ற கருத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதற்காக அவர் வியாழக்கிழமை அன்று ஆளும் பாஜகவிடம் இருந்து பெரிய அளவில் விமர்சனங்களைப் பெற்றார்.
ஜனாதிபதிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதிய கடிதத்தில், “நீங்கள் வகிக்கும் பதவியை விவரிக்க தவறான வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது வாய் தவறி வந்துவிட்டது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி “ராஷ்டிரபத்னி” கருத்துக்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் மன்னிப்பு கேட்டார்.
“…இது வாய் தவறி வந்த வார்த்த என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் குப்தா, குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக வீரர் குகேஷ் செஸ் அறிமுக போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார் மேலும் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இதுவரை 6 இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்த ஆதிர் ரஞ்சனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6ம் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
மதுரையில் சர்வே நம்பரை மாற்ற ₨5000 லஞ்சம் வாங்கிய நில அளவர் முத்துப்பாண்டி ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் 'பி'அணியில் விளையாடிய ரவுனக் சத்வாணி ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை தாக்கியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை இந்தியா வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஓபன் பிரிவில் இந்திய ’ஏ’ அணி – ஜிம்பாம்பே அணியும், மகளிர் இந்திய ’ஏ’ அணி – தஜிகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்திய ’பி’ அணி – ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், இந்திய ’சி’ அணி – தெற்கு சூடான் அணியையும் எதிர்கொள்கிறது. மகளிர் பிரிவில் இந்திய ’பி’ அணி – வேல்ஸ் அணியையும், இந்திய ’சி’ அணி – ஹாங்காங் அணியையும் எதிர்கொள்கிறது.
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட கோரி பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு அளித்திருந்த நிலையில், யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்று உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட கூடுதல் மனுக்களை தள்ளிவைப்பதாகவும், பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில், இன்று முதல் மகளிர் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய மகளிர் அணி விபரம்:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், மேக்னா சிங், ரேணுகா சிங்
ஆஸ்திரேலியா மகளிர் அணி விபரம்:
அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), தஹ்லியா மெக்ராத், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஆஷ்லீ கார்ட்னர், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முதல் சுற்று நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், “செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற முதல்வரின் கனவு நிறைவேறியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பிரமிக்கத்தக்க வகையில் துவக்க விழா நடைபெற்றது” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக பாஜக பிரமுகர் பிரவீன் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் தொடங்கியது. இந்தப்போட்டிகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்
செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று தொடக்க நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் 186 நாடுகளை சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் நடைபெறும் மருத்துவ இளநிலை தேர்வில், ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக படிப்பை முடித்து சான்றுகளை பெற்றவர்கள் பங்குபெறலாம் என்று, கொரோனா, ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் காரணமாக இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கியது முதல் போட்டியில் இந்திய 1 அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய அரசு விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கை தேவை என்றும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது” சென்னை சுற்றுப்பயண வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்வீட்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் காவல்துறைக்கு இல்லை. வதந்தி பரப்பிய 63 யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை – காவல்துறை
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது. உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்” பிரதமரை சந்தித்த பிறகு உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி. புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் உயிரிழப்பு கல்பாளையம் கல்குவாரியை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு.
’அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பேசினார்.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு. பொதுக்குழு விவகாரத்தை 3 வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி உத்தரவு .
பட்டத்தோடு படிப்பு முடிந்து விடாது. பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் வந்திருப்பது மாணவர்களுக்கு பெருமை பட்டம் பெறுவதோடு படிப்பு முடிந்துவிடுவதில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“மாணவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி” புதிய கல்வி கொள்கை சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது.மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி – பிரதமர் மோடி பேச்சு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42ஆவது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். விழாவில் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய நிலையில், பரிசோதனை செய்ததாக தகவல்.
வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, முதல் டி20 ஆட்டத்தை இன்று தொடங்குகிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ள இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.