Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107. 45 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 97.52 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, நாடு முழுவதும் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 24 சுங்கச்சாவடிகளில், 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
IPL 2022: ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில், சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா - 50, ஷிவம் தூபே - 49 ரன்கள் எடுத்தனர். 211 ரன்கள் இலக்கை நோக்கை ஆடிய லக்னோ அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அடுத்து, மும்பையில் இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.
Tamil News LIVE Updates:
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 268.50 உயர்ந்து ரூ. 2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 965.50க்கு விற்பனையாகிறது.
Sri Lanka Crisis: இலங்கை, கொழும்பில் நேற்று (மார்ச் 31)ஏற்பட்ட வன்முறையில் இராணுவ வண்டி தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது. அதிபர் ராஜபக்ஸே வீடு முற்றுகை இடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Mk Stalin Delhi Visit: டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் அளித்தார். அடுத்ததாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். அங்கு அரசுப்பள்ளி, இலவச கிளினிக் திட்டதை கெஜ்ரிவாலுடன் சேர்ந்து ஸ்டாலின் பார்வையிடுகிறார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:41 (IST) 01 Apr 2022மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு; 25% - 150% வரை அதிகரிப்பு
தமிழக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி 25 சதவீதம் முதல் அதிகபட்சமாக 150 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 21:58 (IST) 01 Apr 2022பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து அணியை உருவாக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்: அனைவரும் தங்கள் தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவிட்டு இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும்; அகில இந்திய அளவில் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி உருவாக்க வேண்டும். பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கைகோர்த்து அணியை உருவாக்க வேண்டும்.” என்று கூறினார்.
- 21:50 (IST) 01 Apr 2022காங்கிரஸ் பிற மாநிலங்களில் கட்சிகளுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் திமுக உடன் இருப்பது போல் பிற மாநிலத்தில் உள்ள கட்சிகளுடனும் காங்கிரஸ் நட்புறவை வளர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 21:27 (IST) 01 Apr 2022நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் கைதான மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 20:53 (IST) 01 Apr 2022தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் - உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி
டெல்லியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு உலக ச்செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி: “சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதால் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும்; செஸ் போட்டியில் எப்போதும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்பதை இந்த தருணம் உணர்த்துகிறது.” என்று கூறினார்.
- 20:49 (IST) 01 Apr 2022நீட் விவகாரத்தில் ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்துவது சரி இல்லை - மு.க. ஸ்டாலின்
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நல்லுறவு உள்ளது, நீட் விவகாரத்தில் ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்துவது சரி இல்லை. நாட்டில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களை தீர்மானிப்பதில் திமுகவுக்கு முக்கிய பங்கு உண்டு” என்று கூறினார்.
- 19:45 (IST) 01 Apr 2022டெல்லியில் பிரதமர் மோடி உடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடி உடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்தித்து வருகிறார். முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சந்தித்து பேசினார்.
- 19:11 (IST) 01 Apr 2022பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை; சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை
பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 18:56 (IST) 01 Apr 2022டெல்லியில் இந்திய செஸ் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக ஆலோசனை டெல்லியில் இந்திய செஸ் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 18:54 (IST) 01 Apr 2022விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிசிஐடி காவலில் இருந்த குற்றவாளிக்கு நெஞ்சுவலி
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிசிஐடி காவலில் உள்ள குற்றவாளிகளில் ஜூனத் அகமதுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 18:33 (IST) 01 Apr 2022கள்ளக்குறிச்சி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராம தொடக்கப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் துளசிராமன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 18:20 (IST) 01 Apr 202211ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24-ல் வகுப்புகள் தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை
அடுத்த கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24-ல் வகுப்புகள் தொடங்கும் என்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- 18:18 (IST) 01 Apr 2022நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு; ராஜ்யசபா ஏப்ரல் 4ம் தேதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு - மாநிலங்களவை ஏப்ரல் 4ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 17:49 (IST) 01 Apr 2022யாழ்ப்பாணத்தில் பேரணியில் ஈடுபட்ட ஏராளமானோர் இலங்கை அரசுக்கு எதிராக முழக்கம்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பேரணியில் ஈடுபட்ட ஏராளமானோர் இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மற்றொரு இடத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றதால் இருதரப்பு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
- 17:23 (IST) 01 Apr 2022மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
4 நால் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில், அடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தார்.
- 17:21 (IST) 01 Apr 2022இமாச்சல பிரதேசத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
இமாச்சல பிரதேசத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிவது, கை கழுவுதல் ஆகியவை தவிர்த்து அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என இமாச்சலப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
- 17:11 (IST) 01 Apr 2022மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார் முதலவர் ஸ்டாலின்
4 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில் பியூஸ் கோயலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 16:03 (IST) 01 Apr 2022பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் 2 சிறுவர்களுக்கு காயம்
திருத்தணியில் அரசு அங்கன்வாடியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் 2 சிறுவர்களுக்கு காயம் பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது
- 16:03 (IST) 01 Apr 2022பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் 2 சிறுவர்களுக்கு காயம்
திருத்தணியில் அரசு அங்கன்வாடியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் 2 சிறுவர்களுக்கு காயம் பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது
- 16:02 (IST) 01 Apr 2022பள்ளி நிர்வாகம் அளித்த பதில் அறிக்கையில் திருப்தி இல்லை - பள்ளிகள் இயக்குனர்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த பதில் அறிக்கையில் கல்வித்துறைக்கு திருப்தி இல்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி கூறியுள்ளார்.
- 15:23 (IST) 01 Apr 2022பேருந்து ஊழியர்களை அழைத்து தாக்கிய கவுன்சிலரின் கணவரால் பரபரப்பு
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே தாமதமாக வந்து சென்ற தனியார் பேருந்து பேருந்து ஊழியர்களை அழைத்து தாக்கிய ஏலூர் பகுதி கவுன்சிலரின் கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 14:49 (IST) 01 Apr 2022தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காகத் தான் பிரதமர் மோடியை முதல்வர் சந்தித்தார் - தங்கம் தென்னரசு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காகத் தான் பிரதமர் மோடியை முதல்வர் சந்தித்தார் ஆனால் தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தான் ஈபிஎஸ் முன்பு டெல்லி சென்றார் என கூறியுள்ளார்.
- 14:17 (IST) 01 Apr 2022பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25 முதல் நடத்த உத்தரவு
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடத்தி முடிக்க வேண்டும். பள்ளிகள் செய்முறை மதிப்பெண் பட்டியல்களை மே 4ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளித் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 14:16 (IST) 01 Apr 2022அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு போராட்ட அறிவிப்பு
சென்னையில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், மே மாதம் மேட்டூரில் சாகும் வரை போராட்டம் நடைபெறும் என்றும் அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு அறிவித்துள்ளது.
- 13:54 (IST) 01 Apr 2022ஏப்.25-மே 2 வரை 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு
ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட செயமுறைத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்த அரசு தேர்வுகள் இயக்ககம், செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே மாதம் 4ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 13:52 (IST) 01 Apr 2022முதல்வருக்கு கிடைத்த வரவேற்பால் இபிஎஸ்க்கு பொறாமை
ஒட்டுமொத்த தமிழக நலனுக்கான கோரிக்கைக்காகவே பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்துள்ளார். முதல்வருக்கு கிடைத்த வரவேற்பு எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
- 13:48 (IST) 01 Apr 2022நடிகர் பாலாஜி தன் மனைவி மீது புகார்
மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தன் மனைவியிடம் இருந்து மகளை மீட்டுத் தரக் கோரி சின்னத்திரை நடிகர் பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
- 13:29 (IST) 01 Apr 2022கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது
தமிழகத்தில் மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளை போன்று தமிழகத்திலும் விரைவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று டெல்லியில் முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
- 13:26 (IST) 01 Apr 2022உத்தரவுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை - சென்னை உயர் நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயலுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என்றும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
- 13:25 (IST) 01 Apr 2022ஆம் ஆத்மி மோஹல்லா கிளினிக்கை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் உள்ள மோஹல்லா க்ளினிக்கை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் முக ஸ்டாலினிடம் விளக்கினார்.
- 12:19 (IST) 01 Apr 2022பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள்
பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர உள்ளன. தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாட துவங்கினால் அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும். தேர்வு என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம் என்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
- 12:16 (IST) 01 Apr 2022அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார் முதல்வர்
டெல்லியில், அரசு மாதிரி பள்ளியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Only education can help build a better society and a powerful nation. Let us together bring an education revolution in the whole country. Welcoming the Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru MK Stalin in one of our finest Delhi government schools LIVE https://t.co/PnJS0oFhpq
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 1, 2022Only education can help build a better society and a powerful nation. Let us together bring an education revolution in the whole country. Welcoming the Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru MK Stalin in one of our finest Delhi government schools LIVE https://t.co/PnJS0oFhpq
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 1, 2022 - 12:14 (IST) 01 Apr 2022நூல் விலை உயர்வு
திருப்பூரில் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ. 30 வரை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ நூல் ரூ. 420 முதல் ரூ. 450 வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- 11:25 (IST) 01 Apr 2022நிர்மலா சீதாராமன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
- 11:24 (IST) 01 Apr 2022செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்
செங்கோட்டை மதுரை இடையே பயணிகள் ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக பயணிகள் ரயில் சேவை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 10:59 (IST) 01 Apr 2022ஐஐடி மாணவி வன்கொடுமை வழக்கு!
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளி கிங்சோ தேப்சர்மாவுக்கு, மயிலாப்பூர் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், நேரில் விசாரணைக்கு ஆஜராக சர்மா 2 வாரம் அவகாசம் கோரியுள்ளார்
- 10:58 (IST) 01 Apr 2022விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு!
விமானங்களுக்கான எரிபொருள் விலை 2% அதிகரித்து ஒரு கிலோ லிட்டர் ரூ.1,12,924.83க்கு விற்பனையாகிறது.
- 10:42 (IST) 01 Apr 2022விருதுநகர் பெண் வன்கொடுமை வழக்கு!
விருதுநகர் பெண் வன்கொடுமை வழக்கில், கைதான பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியது.
- 10:26 (IST) 01 Apr 2022ஏப்ரல் மாதத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு!
நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் தீபகற்ப பகுதியில் இயல்பை விட வெப்பநிலை குறைவாக இருக்கும் எனவும், அதேநேரம் ஏப்ரலில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 10:23 (IST) 01 Apr 2022இலங்கை அதிபர் வீடு முற்றுகை!
இலங்கையில், நுகேகொடை பகுதியில் உள்ள அதிபர் ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 09:55 (IST) 01 Apr 2022அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி!
அரசு விரைவுப் பேருந்துகளில், பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏசி மற்றும் நான் ஏசி பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை ஒதுக்க வேண்டும். பேருந்து புறப்படும்வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
- 09:41 (IST) 01 Apr 2022கேபி முனுசாமி உண்ணாவிரதம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
- 08:39 (IST) 01 Apr 2022கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்!
நாட்டிலேயே முதல் மாநிலமாக அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மகாராஷ்டிரா அரசு நீக்கியது. மேற்குவங்கத்தில் கட்டாய முகக்கவசத்தை தவிர அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.
- 08:33 (IST) 01 Apr 2022பாகிஸ்தான் பிரதமராக போராடுவேன்.. இம்ரான் கான்!
பாகிஸ்தான் பிரதமராக இறுதி வரை போராடுவேன். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கொள்வேன் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியுடன் தெரிவித்தார்.
- 08:33 (IST) 01 Apr 2022கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்!
நாடு முழுவதும் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது. 3 மாதங்களுக்கு மாஸ்க் அணியவும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- 08:33 (IST) 01 Apr 2022தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்!
தமிழ்நாட்டில் மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்துவதாக, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.