Petrol and Diesel Price: ரஷ்யா- உக்ரைன் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மீண்டும் 110 டாலரை தாண்டியுள்ளது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ. 102.91 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு!
தமிழ்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 அதிகரித்து, ரூ. 967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிற மாநில உரிமைகளில் தலையிடுவதா? கர்நாடக முதல்வர் சாடல்!
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கை தொடரும். மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்டவிரோதமானது. பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக சாடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
- 22:32 (IST) 22 Mar 2022சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
அரியலூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- 22:31 (IST) 22 Mar 2022காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
தி.நகர் துணை ஆணையராக இருந்த ஹரி கிரண் பிரசாத் குமரி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி சுகுனா சிங் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனர் ஜெயலட்சுமி நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்.பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- 22:29 (IST) 22 Mar 2022குன்றத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதம்
நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவை பெறும் நோக்கில், மாணவிகளின் வருகை பதிவில் திருத்தம் செய்த குன்றத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
- 22:29 (IST) 22 Mar 2022பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை - முதல்வர் ஸ்டாலின்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் புலன் விசாரணை மேற்கொள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா மற்றும் சரக துணைத்தலைவர் பொன்னி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நியமித்துள்ளார்.
- 20:30 (IST) 22 Mar 2022ஜம்மு - கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து - தம்பிதுரை கோரிக்கை
மாநிலங்களவையில் ஜம்மு - கஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி., தம்பிதுரை ஜம்மு - கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 20:27 (IST) 22 Mar 2022அரசுப்பணி ஆசையில் தந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்த மகன்
அரசுப்பணியாளர் கருப்பையா என்பவர் வரும் மார்ச் 31ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், அரசு பணி ஆசையில் மகன் பழனி தனது தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொலை செய்த மகன் கொலை போலீசார் விசாரணையில் அரசு பணி ஆசையில், மகன் பழனி அவரது நண்பருடன் சேர்ந்து தந்தை வை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது
- 20:08 (IST) 22 Mar 2022ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டது குறுக்கு விசாரணை நிறைவு பெறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக அறிக்கையை தயாரிக்கும் பணி நடைபெறும் என்று ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 20:06 (IST) 22 Mar 2022நலிவடைந்த உறுப்பினர்களுக்கு வீடுகள் கட்ட நடவடிக்கை - பூச்சி முருகன்
சென்னை பைனூரில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஏக்கரில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு வீடுகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பூச்சி முருகன் கூறியுள்ளார்.
- 20:04 (IST) 22 Mar 2022நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி
நாடு முழுவதும் தற்போது 6,100 ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வைஃபை இணைய வசதி கிடைக்கிறது என்று மத்திய ரயில்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
- 20:02 (IST) 22 Mar 2022இந்தியர்களை மீட்க அரசின் விமான சேவை அவசியம் - கம்யூனிஸ்ட் எம்.பி.
மத்திய அரசுக்கென சொந்தமாக விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட வேண்டும் உக்ரைன் போர் போன்ற சூழ்நிலைகளில், இந்தியர்களை மீட்க அரசின் விமான சேவை அவசியம் என மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராசு பேசியுள்ளார்.
- 19:32 (IST) 22 Mar 2022உக்ரைனில் 2389 குழந்தைகளை கடத்திய ரஷ்ய படை : அமெரிக்க தூதரகம் தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் கிய மாகாண்களில் இருந்து ரஷ்ய படைகள் 2389 குழந்தைகளை கடத்தி சென்றுள்ளதாக அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
- 18:36 (IST) 22 Mar 2022சின்னம்மா சசிகலா மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது - ஓ.பி.எஸ் பேட்டி
ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: “என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உண்மையான பதில்களை நான் அளித்திருக்கிறேன். சின்னம்மா சசிகலா மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.” என்று கூறினார்.
- 18:15 (IST) 22 Mar 2022தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 25ல் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
சென்னை, வள்ளுவர் கோட்டம் பகுதியில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 25ஆம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
- 17:48 (IST) 22 Mar 2022ஜெ.-வுக்கு என்ன நோய், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி எனக்கு தெரியாது - ஓ.பி.எஸ் வாக்குமூலம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு என்ன நோய், எந்தெந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது. சிகிச்சை அளிக்க வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் யார் என்று தெரியாது. அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய சிகிச்சை மீது நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
- 17:17 (IST) 22 Mar 2022ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. கடந்த இரு நாட்களில் 9 மணி நேரம் நடந்த விசாரணையில் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
- 16:49 (IST) 22 Mar 2022நளினிக்கு ஜாமீன் வழங்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்? எந்த மேல்முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டப்பிரிவின் கீழ் ஜாமின் கோர முடியும் என உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது
- 16:47 (IST) 22 Mar 2022சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என ஜெயலலிதா கூறினார் - ஓபிஎஸ்
குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
- 16:18 (IST) 22 Mar 2022ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓபிஎஸ்
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை.
ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கூறிய போது, என்னை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட சொன்னார் ஜெயலலிதா. பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் என ஜெயலலிதா கூறினார் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
- 15:48 (IST) 22 Mar 2022கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் - முதல்வர்
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை கோட்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
- 15:24 (IST) 22 Mar 2022கொரோனா தடுப்பூசி செலுத்தாத 1.32 கோடி பேரை கண்டறிய வேண்டும் – முதல்வர்
கொரோனா தடுப்பூசி செலுத்தாத 1.32 கோடி பேரை கண்டறிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 60 வயது மேற்பட்டவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் 100% தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் கௌரவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
- 14:55 (IST) 22 Mar 2022சிசிடிவி பதிவுகளை குறைந்தப்படசம் ஒரு ஆண்டு பாதுகாக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை குறைந்தப்படசம் ஒரு ஆண்டு முதல் 18 மாதம் வரை பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- 14:40 (IST) 22 Mar 2022எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ்
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினர் பதவியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜிநாமா செய்தார். ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் அவர் ஒப்படைத்தார்.
- 14:28 (IST) 22 Mar 2022எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
எரிபொருள் மற்றும் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
- 14:18 (IST) 22 Mar 2022மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி - முதல்வர் ஸ்டாலின்
மக்கள் நலப் பணியாளர்களை முதன்முதலாக நியமித்தது திமுக ஆட்சிதான். ஆனால், அதிமுக ஆட்சியில் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- 14:13 (IST) 22 Mar 2022ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை - ஓபிஎஸ் வாக்குமூலம்
ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் சந்தேகத்தை தீர்க்கவே ஆணையம் அமைக்கும் கோரிக்கையை முன்வைத்தேன் என ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்தார்.
- 14:02 (IST) 22 Mar 2022தமிழக சாலை விதிகளை சிறப்பாக அமல்படுத்துகிறது: மத்திய அமைச்சர் பாராட்டு
சாலை கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சாலை பாதுகாப்பு விதிகளை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலம் தமிழகம். சாலை பாதுகாப்பில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.
- 13:54 (IST) 22 Mar 2022முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற விஷால்
சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் சங்க தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் விஷால் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
- 13:52 (IST) 22 Mar 2022முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற விஷால்
சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் சங்க தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் விஷால் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
- 13:41 (IST) 22 Mar 2022மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பாதை
சென்னை, மெரினா கடற்கரையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு நிரந்தர பாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
- 13:31 (IST) 22 Mar 2022மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி. 230 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- 13:24 (IST) 22 Mar 2022ஜெயலலிதா இறக்கும் முன் 3 அமைச்சர்கள் பார்த்தோம்-ஓபிஎஸ்
டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறக்கும் முன் 3 அமைச்சர்கள் பார்த்தோம். உயிர்காக்கும் எக்மோ கருவி ஜெயலலிதா உடலில் இருந்து எடுக்கும் முன் பார்த்தேன். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட CPR சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது என்று ஓ.பி.எஸ். வாக்குமூலம் அளித்தார்.
- 13:12 (IST) 22 Mar 2022மேகதாது தீர்மானம் ஒரு அரசியல் நாடகம் -கர்நாடக முதல்வர்
தமிழகத்தின் மேகதாது தீர்மானம் ஒரு அரசியல் நாடகம் என்றும் தீர்மானத்தால் சட்ட ரீதியாக எந்த ஒரு பயனும் இல்லை என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று அவர் உறுதிபட கூறினார்
- 12:50 (IST) 22 Mar 2022இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் - ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதா தான், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என்று நேரில் ஆஜரான ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு
- 12:32 (IST) 22 Mar 2022பகத்சிங் நினைவு தினம் - பஞ்சாபில் விடுமுறை
பஞ்சாபில் பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23ம் தேதி அன்று அரசு விடுமுறையாக அறிவிப்பு
- 12:30 (IST) 22 Mar 2022ஆன்லைன் சூதாட்டம் : எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
லட்சக்கணக்கான இளைஞர்களை சீரழித்துள்ள ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்த ஈ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
- 12:26 (IST) 22 Mar 2022பெட்ரோல் விலை ரூ.22 அளவிற்கு படிப்படியாக தொடர்ந்து உயரும்
மொத்தமாக விற்பனை செய்யப்படும் இடங்களில் டீசல் விலை படிப்படையாக ரூ. 22 வரை உயர்ந்த நிலையிலும் சில்லறை விற்பனை நிலையங்களில் விலை உயர்த்தப்படவில்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கத்தில் பேச்சு. பெட்ரோல் விலையும் ரூ.22 அளவிற்கு படிப்படியாக தொடர்ந்து உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:58 (IST) 22 Mar 2022நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பற்றிய விவரங்கள் எங்களிடம் இல்லை
நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் எங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ள்ளது.
- 11:21 (IST) 22 Mar 2022ஏப்ரல் 13 வெளியாகிறது பீஸ்ட்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி அன்று வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவிப்பு
- 11:20 (IST) 22 Mar 2022அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை - செல்லூர் ராஜூ
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏவுமான செல்லூர் ராஜூ நாடாளுமன்றத்தில் பேச, போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகின்ற சூழலில் இந்த நடவடிக்கையை தற்ஓது மேற்கொள்ள இயலவில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
- 10:56 (IST) 22 Mar 2022பாடப்புத்தகங்கள் அச்சிடும் டெண்டர்!
தமிழகத்தை சேர்ந்த 97 நிறுவனங்களுக்கு பாடப்புத்தகங்கள் அச்சிடும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல்!
- 10:29 (IST) 22 Mar 2022புதூர் புதிய வருவாய் வட்டமாக மாற்ற அரசு முன்வருமா?
தூத்துக்குடி மாவட்டம் புதூர் புதிய வருவாய் வட்டமாக மாற்ற அரசு முன்வருமா? என எம்எல்ஏ மார்க்கண்டேயன் எழுப்பிய கேள்விக்கு, புதூர், புதிய வருவாய் வட்டமாக மாற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதில்!
- 10:29 (IST) 22 Mar 2022ஓபிஎஸ்-யிடம் 2வது நாளாக விசாரணை!
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் வந்துள்ளார். 2வது நாளாக அவரிடம் இன்று விசாரணை நடக்கிறது. சசிகலா தரப்பும் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்துகிறது.
- 10:29 (IST) 22 Mar 2022மீண்டும் அதிகரித்த கொரோனா.. முதல்வர் ஆலோசனை!
பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 10:19 (IST) 22 Mar 2022சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறை!
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1990ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த 60 வயதான ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- 10:18 (IST) 22 Mar 2022தேர்வு இல்லாமலே எம்பிபிஎஸ் பட்டம்!
உக்ரைனில் நிலவும் போர் சூழல் காரணமாக, இறுதி ஆண்டு மருத்து மாணவர்களுக்கு தேர்வு இல்லாமலே, எம்பிபிஎஸ் பட்டம் வழங்க உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளது.
- 09:51 (IST) 22 Mar 2022விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது புகார்!
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தங்கள் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு 'ரவுடி பிக்சர்ஸ்' என பெயர் வைத்திருப்பது’ ரவுடிகளை ஊக்கப்படுத்தும் என’ புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
- 09:51 (IST) 22 Mar 2022மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் பதவியேற்பு!
மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் 2வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
- 09:50 (IST) 22 Mar 2022NATO அமைப்புக்கு உக்ரைன் அதிபர் கேள்வி?
எங்களை ஏற்கிறோம் அல்லது ரஷ்யாவுக்கு பயந்து ஏற்கமாட்டோம் என்கிற உண்மையை NATO அமைப்பு உடனடியாக வெளிப்படையாக கூறவேண்டும்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
- 09:50 (IST) 22 Mar 2022சட்டப்பேரவையில் இன்று!
சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடக்க உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியே, கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அதிமுக எம்எல்ஏ. செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.
- 09:22 (IST) 22 Mar 2022கேங்மேன் பணி - தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாத 5,493 பேரின் பிரச்னைகளை களைய, வாரிய செயலாளரை தலைவராக கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 08:45 (IST) 22 Mar 2022மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.1,000த்தில் இருந்து ரூ.3000 ஆகவும், கடும் ஊனத்திற்கு உதவித்தொகை ரூ.5,000 ஆகவும் உயர்த்தி வழங்கவும் கோரிக்கை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- 08:45 (IST) 22 Mar 2022பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை!
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
- 08:45 (IST) 22 Mar 2022ஹிஜாப் அணிந்து சென்ற 40 மாணவிகள் தேர்வெழுத தடை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹிஜாப் அணிந்து சென்ற 40 மாணவிகளுக்கு, தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்ற உத்தரவுப்படி இந்த முடிவை எடுத்ததாக, கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
- 08:44 (IST) 22 Mar 2022டீசல் கொள்முதல் நிறுத்தம்!
மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களில், டீசல் மொத்த கொள்முதலை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிறுத்தியது.
- 08:44 (IST) 22 Mar 2022அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!
ரஷ்ய அதிபரை போர் குற்றவாளி, சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியதை கண்டித்து, அமெரிக்காவுடனான தூதரக உறவை முறிப்போம் என்று ரஷ்யா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 08:43 (IST) 22 Mar 2022புதினை எதிர்கொள்வதில் இந்தியா கலக்கத்தில் உள்ளது!
ரஷ்ய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று கலக்கத்தில் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
- 08:43 (IST) 22 Mar 2022ஓபிஎஸ் இன்று ஆஜர்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்றும் ஆஜராகிறார்.
- 08:43 (IST) 22 Mar 2022போக்குவரத்து மாற்றம்!
கடந்த ஆண்டில் பெய்த மழையால் அரகண்டநல்லூர் சிறுபாலம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதனை சீரமைக்கும் பணிக்காக, விழுப்புரம் - திருக்கோயிலூர் சாலையில் 3 மாத காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.