scorecardresearch

மெட்ரோ ரயிலில் செல்லப்பிராணிகளுக்கு அனுமதியில்லை !

சென்னை மெட்ரோ ரயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

செல்லப்பிராணிகளுக்கு அனுமதியில்லை
செல்லப்பிராணிகளுக்கு அனுமதியில்லை

சென்னை மெட்ரோ ரயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மெட்ரோ ரயிலில் இறைச்சி கொண்டு செல்ல இதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.  எல்லா வகையான இறைச்சியும் கொண்டு செல்ல முடியாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு வழிமுறைகள் 2014 படி, பறவைகள் அல்லது செல்லப்பிராணிகள் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதியளிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி பேசுகையில் “ எல்லா வகையான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளும் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதியளிக்கப்படுவதில்லை. பயணிகளுக்கு தொல்லையாக இருக்கும் என்பதாலும், சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு இது கடைபிடிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

கீழ்பாக்கத்தில் வசிக்கும் டி. விக்ரம்,  திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனது நாய்யை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். இந்நிலையில் மெட்ரோ ரயிலின் விதிமுறைகளை, இணையதளத்தில் பார்த்துவிட்டு, இந்த முடிவை அவர் கைவிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pets not allowed in metro train chennai

Best of Express