மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதில் தற்பொதைய நிலையே தொடர வேண்டும் என முதலமைச்சருக்கு மருந்து உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
மருந்து மற்றும் ஒப்பனை சட்டத்தின்படி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான உரிமைகளை இனி மத்திய அரசுதான் வழங்கும் என்று ஒரு அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது இது மருந்து உற்பத்தி நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என முதலமைச்சர் ரங்கசாமியை இன்று சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மருந்து உற்ப கோரிக்கை வைத்துள்ளனர்.
மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதில் தற்பொதைய நிலையே தொடர வேண்டும் என முதலமைச்சருக்கு மருந்து உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியை இன்று சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். அதில் மருந்து மற்றும் ஒப்பனை சட்டத்தின்படி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான உரிமைகளை இதுவரை மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. ஆனால் இதனை மாற்றி இனி மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையில் வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் உரிமங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் எனக் கூறி முதலமைச்சரிடம் அவர்கள் மனு அளித்தனர். மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சுப்ரமணி,
மருந்து வணிகர்கள் சங்க சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் நாகலிங்கம் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
புதுச்சேரி சேதராப்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் இது போன்ற சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டால் புதுச்சேரிக்கு மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வருவதில் சிக்கன் ஏற்படும். அதனால் புதுச்சேரி அரசு தனது எதிர்ப்பினை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர் மருந்து உற்பத்தியாளர் சங்க செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளிக்கும்போது, மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சுப்ரமணி, மருந்து வணிகர்கள் சங்க சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் நாகலிங்கம் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“