scorecardresearch

ஐ.ஐ.டி-யில் தொடரும் தற்கொலை: ஆராய்ச்சி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, ஐ.ஐ.டி-யில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Trichy prison constable commits suicide
Trichy prison constable commits suicide

சென்னை, ஐ.ஐ.டி-யில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின். இவர் சென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் பி.எச்.டி படித்து வந்தார். இந்நிலையில் சச்சின் குமார் நண்பர்களுடன், வேளச்சேரியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். 31ம் தேதி, அவர் வழக்கம்போல் வகுப்புச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் காலை வகுப்பு முடிந்ததும், உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டு திரும்பிய, அவரது நண்பர்கள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சச்சின் குமாரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இநிந்லையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக அவரது, நண்பர்களிடம் விசாரித்தனர்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, வாட்ஸ் ஆப்-ல் ’என்னை மனித்து விடுங்கள், நலமுடன் இல்லை ‘என்று ஸ்டேடஸ் வைத்ததாக கூறப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Phd research scholar from the mechanical engineering department at iit madras suscide

Best of Express