வானதி சீனிவாசன் அலுவலகத்தில் பிரதமரின் தாயார் ஓவியத்தை வரைந்த மாற்றுத்திறனாளி
கோவை தெற்கு தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் முன் பிரதமர் மோடியின் தாயார் ஓவியத்தை மாற்றுத்திறனாளி சங்கர் என்பவர் வரைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிசம்பர் 30) அதிகாலை உயிரிழந்தார். 100 வயதான ஹீராபென் உடல் நலக்குறைவால் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisment
பிரதமர் மோடி தாயார் ஹீராபெனுக்கு இறுதி சடங்கு செய்தார். ஹீராபென் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் வானதி சீனிவாசன் உள்பட பா.ஜ.கவினர் பலர் கலந்து கொள்கின்றனர்.
அஞ்சலி நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக தரையின் முன் ஹீராபென் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்தார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.