/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-30-1.jpg)
Coimbatore
தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ப்ரூக்பான்ட் சாலையில் 55 வயதான பழனியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தனது தங்கையுடன் வாடகை வீட்டில் வசித்தபடி பூ வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே வீடு வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை விண்ணப்பித்தும் தனக்கு வீடு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார். அதேபோல் தேர்தலில் வாக்கு அளிக்கும் போது தன்னை அழைத்துச் செல்வதாகவும், வாக்களித்த பின் தன்னை கண்டு கொள்ளாமல் அங்கே விட்டு விட்டு செல்கின்றனர் எனவும் கவலை தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-23-at-14.00.43.jpeg)
மேலும் அரசு வழங்கும் மாற்றுத் திறனாளி உதவித்தொகை ரூ.1000 வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை எனவும் சூழ்நிலையை கருதி அரசு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.