/tamil-ie/media/media_files/uploads/2018/03/pinarayee-vijayan..jpg)
Pinarayee Vijayan Medical Check up At Chennai Apollo
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமான மருத்துவ பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.
சென்னை, ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று (மார்ச் 2) இரவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனை இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பினராயி விஜயனுக்கு ஆண்டுக்கொரு முறை நடைபெறும் வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் இது. ஞாயிற்றுக் கிழமை (4-ம் தேதி) வரை அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.