பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த ஆட்டோவில், ஜி.பி.எஸ் கருவி மற்றும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலிஅயில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 'பிங்க் ஆட்டோ' திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
அதன்படி, சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் முதல் கட்டமாக 250 பிங்க் ஆட்டோக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த பிங்க் ஆட்டோக்கள் மார்ச் மாதம் முதல் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிங்க ஆட்டோ எப்படி இருக்க வேண்டும் என்றால், 'ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். இந்த பிங்க் நிற ஆட்டோக்களில் பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும். பிங்க் நிற ஆட்டோக்களை இயக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஜி.பி.எஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் இடம்பெற்றுள்ளன.