சென்னையில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்.. எந்தெந்த பகுதிகளில்?

பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Piped water supply cut off in Kodungaiyur for 32 hours

மாதவரம் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் கட்டுவதற்கு வசதியாக, மாதவரம் பால் பண்ணையில் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், திங்கள்கிழமை காலை 8 மணி முதல் செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழாய் நீர் விநியோகம் இருக்காது.

Advertisment

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாதவரம் பால் பண்ணை சாலையில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்கள் மாற்றி இணைக்கும் பணிகள் வரும் 23ம் தேதி காலை 8 மணி முதல் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, பகுதி-3க்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன்மேடு, பகுதி-4க்கு உட்பட்ட கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பெரம்பூர் (பகுதி), வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் பகுதி-6க்கு உட்பட்ட பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு 24ம் தேதி மாலை முதல் இப்பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள, பகுதி-3 பொறியாளரை 8144930903 என்ற எண்ணிலும், பகுதி-4  பொறியாளரை 8144930904 என்ற எண்ணிலும், பகுதி-6 பொறியாளரை 8144930906 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: