சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 15 கோடி லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யக்கூடிய குடிநீர் ஆலைக்கு குழாய் பதிக்கும் பணி தொடங்கவிருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்லும் பாதையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளனர்.
இந்த ஆலையில் இருந்து வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம்பேட்டை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், சிறுசேரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை ஆலையின் முன்புறம் மண் அள்ளும் இயந்திரம் மூலம், கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக சூளேரிக்காடு – கிருஷ்ணன்காரணை இடையே ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
தோண்டப்பட்ட சாலையின் ஒரு பகுதியில் பேரிகார்டுகள் போடப்பட்டு, சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வாகனங்கள் மற்ற வழியாக அனுமதிக்கப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil