கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் - சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மற்றும் உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து நேற்று இரவு சென்னை செல்ல விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பயணியின் பேக்கை சோதனை செய்த போது, அதில் கை துப்பாக்கி ஒன்று இருந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஈரோட்டை சேர்ந்த சக்திவேல்(40) என்பதும், மாங்காட்டில் சொந்த தொழில் செய்து வருவதால், சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் கை துப்பாக்கியை பறிமுதல் செய்து, அதற்கு உரிய லைசன்ஸ் உள்ளதா? என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலைய வளாகத்தில் கை துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“