Advertisment

வாய்ச்சொல்லில் வீரர்... சீமானுக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு

'ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் கருணாநிதி சிலை, பேனா சிலையை உடைப்போம்' என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபுவிடம் பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
PK Sekar Babu responds to Seeman comment over breaking karunanidhi statue Tamil News

"சீமான் வாய் சொல்லில் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்கக்கூடாது. பலப்பிரயோகம் இருக்க வேண்டும்." என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை, பேனா சிலையை உடைப்போம்' என்று கூறியிருந்தார். இந்நிலையில்,  சீமான் கூறியது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கருணாநிதி, உடன் பிறப்பு என்ற ஒரு வார்த்தையால் தூக்கி நிறுத்திய கரங்கள் ஒரு கோடிக்கும் மேல் உள்ளது. ஒரு சில லட்சங்களை கொண்ட இவருடைய கரங்கள் சிலைகளை உடைக்க முற்படுமானால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரங்கள் எப்படி பதம் பார்க்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

எப்படிப்பட்ட பகை வந்தாலும், அதை தோற்கடிக்கின்ற வல்லமை பொருந்திய படை தான் திராவிட மாடல் படை. நாங்கள் சமத்துவம், சமாதானம் பேசுவதால் நாங்கள் கோழைகள் என்று நினைத்து விடாதீர்கள். எங்களுக்குள்ளும் வீரம் இருக்கிறது.

சீமான் வாய் சொல்லில் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்கக்கூடாது. பலப்பிரயோகம் இருக்க வேண்டும். அதேபோல் தேர்தல் களங்களில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். இதை தவிர்த்து விட்டு, வாய்க்கு வந்ததை பேசிவிட்டு போனால், எந்த பலனும் கிடையாது. என்று அவர் கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Naam Tamilar Katchi Seeman Minister P K Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment