தமிழ்நாட்டில் மது விற்பனையை அதிகரிப்பது குறித்தும், மூடப்பட்ட 500 கடைகளின் இழப்பீட்டை ஈடு செய்வது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மதுவின் விற்பனை விலையை அதிகரித்து என முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மதுவின் விலை குவாட்டருக்கு ரூ.10வரை விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
எனினும் சில பிராண்டுகளின் விலையில் கணிசமான உயர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட சில பிராண்டுகளின் விலையில் ரூ.80 வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரம், பிராந்தி, விஸ்கி, ஜின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை குவாட்டருக்கு ரூ.10 வரை அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டது.
அதேநேரத்தில் ஆஃப் பாட்டில் ரூ.20 முதல் ரூ.50வரை அதிகரிக்க வய்ப்புகள் உள்ளன. மேலும் சில குறிப்பிட்ட பிராண்டுகள் ரூ.80 வரை விலை உயர்த்தப்படலாம் என்றார்.
மேலும் பீர் பாட்டில்களின் விலையும் ரூ.10 வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான கொள்கை முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.
அப்போது எந்தெந்த பிராண்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது? அதிகரிக்கப்பட்ட பிராண்டுகளின் முழுமையான விலை என்ன? என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகும்.
2023 மார்ச் மாத கணக்கின்படி தமிழ்நாட்டில் 4829 மதுபானக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 கோடி வரை வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“