மதுரை நகரில் காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை வேளையில் குளிர்ந்த காற்றுடன் லேசான தூறல் மழை பொழிய துவங்கிய நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கிறது. மதுரையில் சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் தற்போது கன மழை பெய்து இருந்தால் பெங்களூரில் இருந்து மதுரைக்கு வந்த விமானமும் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த விமானம் இரண்டு விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு வருகிறது.
மோசமான வானிலை காரணமாகவும் மழை பொழிவதால் சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் திருமங்கலம் பகுதிகளும் பெங்களூரில் இருந்து புறப்பட்ட விமானம் ஆண்டிப்பட்டி பகுதிகளிலும் வானத்தில் வட்டமடித்து வருகிறது. இரு விமானங்களும் மழை ஓய்ந்தால் மட்டுமே வானிலை சீரானால் மட்டுமே தரையிறங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற நிலையில் உள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள், ஒருவழியாக மதுரையில் பத்திரமாத தரையிறங்கின.
கனமழையால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் சுமார் 40 நிமிடங்களாக வானில் வட்டமடித்தன.
சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள், சுமார் 40 நிமிடங்களாக வானில் வட்ட மடித்த நிலையில், தொடர்ந்து வானிலை சீரான நிலையில் பத்திரமாக தரையிறங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“