Plastic Ban Tamil Nadu : இந்த வருடத்தின் முதல் நாளான இன்றிலிருந்து தமிழகம் எங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே வீடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், இதர பிளாஸ்டிக் பொருட்களை என்ன செய்வது, எப்படி அதனை முறையாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்துவது என்பது அனைவரின் கேள்விக் குறியாக இருக்கிறது.
கவலையே வேண்டாம். அனைத்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் உங்கள் மாநகராட்சி வார்ட் அலுவலங்களில் கொடுத்துவிடலாம். அதனை முறையாக தரம் பிரித்து, போக்குவரத்திற்காக போடப்படும் தார்சாலைகளில் பயன்படுத்தப்படும்.
Plastic Ban Tamil Nadu : ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை என்ன செய்வது ?
சென்னைவாசிகள் தங்கள் வீட்டில் பயன்படுத்திய பிளாஸ்டிக் கோப்பைகள், ஷீட்டுகள், ஸ்ட்ராக்கள், மற்றும் பைகள் ஆகியவற்றை அருகில் இருக்கும் வார்ட் அலுவலகங்களில் கொடுத்துவிடலாம்.
இது தொடர்பாக சனிக்கிழமை, சென்னை மாநகராட்சி ஆணையர் டி. கார்த்திகேயன், இதர மாநகராட்சித் துறை தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். தடை செய்யப்பட்ட பொருட்களை எங்கு பயன்படுத்தினாலும் அதனை சீஸ் செய்யவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களும் தங்களின் பங்கிற்கு இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் துணிப்பைகள், பேப்பர் கோப்பைகள், ஸ்ட்ராக்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : பொதுமக்களே உஷார் : நாளை முதல் பிளாஸ்டிக் தடை! என்ன செய்ய போகிறீர்கள்?