பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பி.சுசீலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, சமஸ்கிருதம் உள்பட பல்வேறு மொழி படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
1950 முதல் சினிமாவில் பின்னணி பாடகியாக இருக்கும் பி.சுசீலா 17,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிக பாடல்களை பாடியவராக அறியப்படுகிறார்.
இந்நிலையில், 88 வயதான பி.சுசீலா சிறுநீரகக் கோளாறு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவனையில் இருந்து நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“