எம்.பி.சி பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க கூடாது- ஐகோர்ட் உத்தரவு

எம்.பி.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு எடுப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

எம்.பி.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு எடுப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

author-image
WebDesk
New Update
HC Madurai Bench order, Action if Government School Teachers Take private Tuition, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுத்தால் நடவடிக்கை, ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, Tamilnadu school education department

Pleas filed against TN backward class commission deciding MBC internal reservation: மே 31ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டத்தை நடத்தலாம். ஆனால், இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைகளையோ, முடிவையோ எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீட்டிற்குள் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த முடிவையும் எடுப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் உள்ள பழங்குடியினர் நலச் சங்கத் தலைவர் எம்.ஜெபமணி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்மீனவர் கூட்டமைப்பு ஏ.பிரேசில் ஆகியோர் இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தனர்.

பிரேசில் தாக்கல் செய்த மனுவில், "மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையிலான இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டு, அந்த அரசாணையை ரத்து செய்தது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் அதனை மீறும் வகையில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவர், மே 31-ஆம் தேதி கூட்டம் நடத்த முடிவு செய்து அதன் உறுப்பினர்களுக்கு அதுதொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மே 31ஆம் தேதி நடைபெற உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

மேலும், ஜாதி வாரியாகத் தரவு சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுவரை தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் உள் இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு என்பது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் (என்சிபிசி) கலந்தாலோசித்து மட்டுமே எடுக்கப்படும் ஒரு முக்கிய கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பில் கூறியுள்ளது என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் மேற்கூறிய அம்சங்கள் இருந்தபோதிலும், ஜூலை 2020 இல் மாநில அரசு இயற்றிய அரசாணையின் அடிப்படையில் MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க மே 31 அன்று அதன் உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மே 20, 2022 அன்று ஒரு தகவல் அனுப்பியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.  அரசாணையின் படி, MBC இடஒதுக்கீட்டிற்குள் உள் இடஒதுக்கீடு கோரி பல்வேறு சமூகங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது பரிந்துரை செய்வது, ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகளில் ஒன்றாகும் என்றும் மனுதாரர்கள் கூறினார்.

இது 68 DNT சமூகங்கள் உட்பட 115 சமூகங்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்று கூறிய மனுதாரர்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேற்கூறிய குறிப்பு விதிமுறைகளின்படி செயல்படுவதைத் தடுக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள்: 134 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; உடனடியாக மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 31ஆம் தேதி கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம். ஆனால், இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைகளையோ, முடிவையோ எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, மத்திய, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர்கள் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madras High Court Madurai Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: