scorecardresearch

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வேண்டாமே – புதுக்கோட்டை ஆட்சியர்

இவை நீர் நிலைகளில் உள்ள உயிரினங்களை, நம்முடைய பாரம்பரிய மீன்களை, அவற்றின் முட்டைகளை உணவாக எடுத்துக் கொள்ளும்.

Pudukottai Collector Uma Maheshwari IAS

உள்ளூர் மீன்களின் மரபியலைக் கெடுக்கும், ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை கொள்முதல் செய்ய வேண்டாமென புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கட்லா, ரோகு, மிர்கால், சீனப்பெருங்கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை, இந்தியப் பெருங்கெண்டை ஆகிய தமிழக பாரம்பரிய  மீன்கள் இங்கு வளர்கின்றன.

இவற்றுடன் மரபியல் மேம்படுத்தப்பட்ட, திலேப்பியா, கொடுவா ஆகிய மீன்கள் தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது ஆப்பிரிக்க வகை கெண்டை மீன்கள் பரவலாக புழக்கத்தில் வந்திருக்கின்றன. இவை வளர்ப்புக்கும், விற்பனைக்கும் தடை செய்யப்பட்டவை. இவை நீர் நிலைகளில் உள்ள உயிரினங்களை, நம்முடைய பாரம்பரிய மீன்களை, அவற்றின் முட்டைகளை உணவாக எடுத்துக் கொள்ளும். தவிர, உள்ளூர் மீன்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்தால், மரபியல் மாற்றம் நிகழ்ந்துவிடும் அபாயமும் உள்ளது.

இதனால் மீன் வளர்ப்பவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம் விவசாயத்திற்கும், மீன் வளர்ப்பிற்கும் பெயர் போன மாவட்டம். அதனால் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை பொதுமக்கள் வாங்கி வளர்க்கவோ, சமைத்து சாப்பிடவோ வேண்டாம்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இதே விஷயத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யாவும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Please avoid african type fishes says pudukottai collector