/tamil-ie/media/media_files/uploads/2017/06/board-exams-eps.jpeg)
2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ஆரம்பமாகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத எழுதுகின்றனர். பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 278 புதிய தேர்வு மையங்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
45 ஆயிரத்து 380 ஆசிரியர்கள் தேர்வின் போது அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.மேலும், தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ் வழியில் மட்டும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 243 பேர் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வுகள் குறித்த புகார்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை மீறோவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறத்தப்பட்டுள்ளது. ழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி நிர்வாகம் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 103 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் இந்த ஆண்டுக்கான ப்ள்ஸ் 2 தேர்வினை எழுதுவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.