Advertisment

கிசான் ஊழல்; 5 லட்சம் போலி பயனாளிகள்: ககன்தீப் சிங் பேடி சொல்வது என்ன?

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர், ககன்தீப் சிங் பேடி, 5 லட்சம் தகுதியில்லாத பயணாளிகள் பணத்தை பெற்றுள்ளதாகவும் இதில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கிசான் ஊழல்; 5 லட்சம் போலி பயனாளிகள்: ககன்தீப் சிங் பேடி சொல்வது என்ன?

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர், ககன்தீப் சிங் பேடி, 5 லட்சம் தகுதியில்லாத பயணாளிகள் பணத்தை பெற்றுள்ளதாகவும் இதில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

பிரதமரின் கிசான் திட்டம் சம்பந்தமாக ஊடகங்களில் வருகின்ற செய்தி சம்பந்தமாக சில விளக்கங்களை ஊடகங்களிடம் சொல்ல விரும்புகிறேன். பிரதமரின் கிசான் திட்டம் இந்தியாவில் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கிசான் திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் தவணையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

அதில் சில தகுதி இல்லாதவர்கள் வகையும் உள்ளது. உதாரணமாக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசு ஊழியர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கிசான் திட்டத்தின் கீழ் பயண் பெற முடியாது. அதே நேரத்தில் நிலம் இல்லாதவர்கள் பிஎம் கிசான் திட்டத்திடில் பயன் பெற முடியாது. மற்றொரு விஷயம் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பிரதமரின் கிசான் திட்டத்தில் நிதி பெற முடியும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டோர் பயன்பெற முடியாது.

இந்த திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு முதலில் சிறு குறு விவசாயிகளுக்காக மட்டும் இருந்தது. கடந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும் நிதி அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு 3 தவணையாக இந்த ரூ.6,000 கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மே ஜூன் ஜூலை மாதங்களில் ஒரு தவணை, ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதத்தில் ஒரு தவணை, டிசம்பர் மார்ச் மாதங்களில் 3 வது தவணை என பயனாளர்களுக்கு இந்த நிதி அவர்களுடைய வங்கி கணக்கில் போடப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 38 39 லட்சம் பேர் வரை இந்த நிதி பெறுவதற்கு தகுதியுடையவர்கள் இருந்தார்கள்.

உண்மையில் அரசு வருவாய்த்துறை வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு தேர்வு அமைக்கபப்ட்டு சரிபார்த்துள்ளார்கள்.

நவம்பர் மாதம் நிறைய பேருடைய பெயர் விட்டுப் போய்விட்டது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் தகுதியுடைய விவசாயிகளுக்கு இன்னும் பணம் வரவில்லை என்று புகார் எழுந்தது. அதனால், நவம்பர் மாதத்தில் பிரதமரின் கிசான் இணையதளத்தில் பார்மர் கார்னர் என்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டது. அதில் பார்மர் கார்னரில் ஒருவர் அவராகவே கிசான் திட்டத்தில் தன்னுடைய பெயர், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரம், நில விவரம் போன்ற விவரங்களை பதிவு செய்யலாம் என்ற வசதி வழங்கப்பட்டது. அவர்கள் பதிவு செய்த பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் அல்லது வட்டார அலுவலர் அளவில் அதற்கு அனுமதி அளித்து பதிவேற்றம் செய்யப்படும். அது ஒரு நல்ல முயற்சி. விவசாயிகளின் வசதிக்காக தொடங்கப்பட்டது.

இதில், முன்பு இருந்ததை விட கடந்த ஆண்டு இறுதியில் என்ன வேறுபட்டது என்றால், மாநில அரசு தானாக பெயர்களை எடுத்துக்கொண்டு அவர்களுடைய பெயரில் நிலம் இருந்தால் கணினியில் சரி பார்த்து விட்டு, ரேஷன் அட்டையை வாங்கி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பிரதமரின் திட்டத்தில் தவணை அளிக்க வேண்டும் என்று செய்து வந்தோம். ஆனால் பார்மர் கார்னர் அகில இந்திய அளவில் தொடங்கிய பிறகு, சில மாநிலங்களில் ரேஷன் கார்டு இல்லாமல் இருப்பதால் நில விவரங்கள் கணினியில் பதிவு இல்லாமலிருக்கலாம், அதனால் அங்கே சரிபார்ப்பதற்கு கணினி தகவல் இல்லை. ஆனாலும், அது மார்ச் மாதம் வரை சரியாக இருந்தது.

கொரோனா காலத்தில் வந்து மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டார்கள். அவர்கள் பொதுமக்களுக்கு காய்கறி பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக ஜூன் ஜூலை மாதங்களில் வட்டார அளவில் லாக் இன் பாஸ்வேர்டு அளிக்கப்பட்டது.

மேலும், இன்னொரு காரணம் ஒரு பெயரில் உதாரணமாக ஒருவரின் ஆதார் அட்டையில் பெயரில் இனிஷியல் முன் பின்னாக மாறி இருந்தால் சரியா இருக்காது. கணினியில் தவறு என்று காட்டும். அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த பாஸ்வேர்ட்

அளிக்கப்பட்டது. அந்த பாஸ்வேர்டை சில தனியார் டேட்டா கணினி மையங்கள், தரகர்கள், தனியார் கம்ப்யூட்டர் செண்டர்கள் பாஸ்வேர்டை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களின் என் பெயர் விவரங்களை வாங்கி பதிவு செய்து செய்ததாக ஒரு தகவல் உள்ளது.

விழுப்புரம் பகுதியில் தான் இது போல தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பாவி விவசாயிகளிடம் கொரோனா நிவாரண பணம் வருகிறது என்று கூறி அவர்களுடைய பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு, வங்கி விவரங்களை வாங்கி 500 ரூபாய் வாங்கிக்கொண்டு பதிவு செய்துள்ளனர். இதனை கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்த நபர்கள் செய்திருக்கிறார்கள்.

ஜூன் ஜூலை மாதத்தில் கிசான் திட்டத்தில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அறிந்து நாங்கள் ஒரு குழு அமைப்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம். அதில் ரேஷன் கார்டு ஆவணம் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வைத்தோம்.

கிசான் திட்டத்தில் 6 லட்சம் பயனாளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக 13 மாவட்டங்களில் நிறைய பயனாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் பதிவு செய்து இருக்கலாம். ஆனால், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பெயர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதில் பலர் தனியார்களின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று நாங்கள் விசாரித்து சொன்னோம் அதற்குப்பிறகு ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தது.

தமிழக அரசு தகுதி இல்லாதவர்களுக்கு பிரதமரின் கிசான் திட்டத்திலிருந்து 1 ரூபாய் கூட போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அதனால், இதை நாங்கள் அமைச்சரிடம் தெரிவித்தோம். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலமையில் மாவட்ட அளவில் விசாரிக்க குழுக்கள் அனுப்பினோம்.

அதன் பிறகு 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் காலகட்டத்தில் பதிவு செய்த அனைத்து பெயர்களையும் விசாரித்து சரி பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. வருவாய் துறை தோட்டக்கலை துறை அலுவலர்கள் சரி பார்த்து விட்டார்கள். நாங்கள் அதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பயனாளர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பதை கண்டுபிடித்திருக்கிறோம். இது ஒரு முக்கியமான செய்தி அப்பாவி விவசாயிகளை சில தனியார்கள் லாப நோக்கத்துடன் அவர்களுடைய பெயர்கள் விவரங்களை வாங்கி சேர்ப்பது தவறான விஷயம். 24 ஆம் தேதி பிரதமரின் கிசான் முறைகேடு விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபிக்கு கடிதம் அளித்தோம். சிபிசிஐ 24ம் தேதி முதல் இந்த முறைகேடு வழக்கை விசாரித்து வருகிறது. சிபிசிஐடியும் விசாரிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அதன்பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை முறையாக அறிவிப்பதற்கு தாமதமானதற்கு காரணம் போலீஸ் விசாரிக்கும் போது தடயங்களை மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக காத்திருந்தோம். முறைகேடு செய்த்தாக 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதுக்கு மேல் கூட இருக்கலாம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தனியார் கம்ப்யூட்டர் சென்டர்கள் புரோக்கர்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத. கிட்டத்தட்ட மொத்தமாக என்பது சதவீதம் கணினின் ஊழியர்கள், ஏடிஎம் பிளாக் மேனேஜர்கள் என சந்தேகத்துக்கு உரியவர்கள் என்பது பேர் பணிநீக்கம் செய்து உள்ளோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிபிசிஐடி அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது வரக்கூடிய நாட்களில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதியில்லாத பயனாளர்களுக்கு லாக் இன் அடியை பயன்படுத்தி பதிவு செய்ததை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடுத்த முக்கியமான விஷயம் பணத்தை திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான பயனாளர்களுக்கு தகுதியான பயனாளர்கள் அனைவருக்கும் பணம் போய் சேர்ந்துவிட்டது. ஆனால், கடந்த கடைசி தவணையில் 5 லட்சத்திற்கு மேல் பயனாளர்கள் சந்தேகத்துக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இது கூடுதலாக கூட இருக்கலாம். பணம் திரும்ப பெற வேண்டும் என்ற ஒரு விஷயம் இருக்கிறது.

இது போல, அசாம் மாநிலத்தில் 9 லட்சம் பயனாளர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற்று இருக்கிறார்கள். எங்களுடைய நோக்கம் பணத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். அதற்காக ஒரு சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். இந்தியன் பேங்க் தலைவர், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளை தொடர்புகொண்டு கொண்டோம்.

அரசின் அரசின் விதிப்படி ஒரு தகுதி இல்லாத பயனாளருக்கு அரசின் சலுகை சென்றிருந்தாள், தவறான பயனாளிகளுக்கு அளிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறலாம். அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப கொடுப்பதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சராசரியாக நாங்கள் 32 கோடி ரூபாய் திரும்ப பெற்று இருக்கிறோம். விரைவாக நாங்கள் தவறான பயணார்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறுவோம். போலி வங்கி கணக்குகளில் இருந்து இருந்து 32 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

பிரதமரின் கிசான் திட்டத்தில் பணத்தை பெற்ற ஒவ்வொரு தகுதியில்லாத பயனாளர்களின் ஆதார் எண் வங்கி கணக்கு விபரம் என அனைத்தும் எங்களிடம் உள்ளது. அதனால், அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திரும்பப் பெறப்பட்டு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Pm Kisan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment