வாழ்க்கை நெறிமுறைகள், அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் மற்றும் காதல் என்ற முப்பால் நூலான திருக்குறளின் ஆசிரியராக அறியப்படும் திருவள்ளுவரின் பிறந்தநாள் ஜனவரி 16 தேதி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல மூத்த அரசியல்வாதிகள் திங்கள்கிழமை தங்கள் சமூக ஊடக கணக்குகளில் வாழ்த்துகளை பதிவு செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில், ஞானமுள்ள வள்ளுவருக்கு வீரவணக்கம் செலுத்தி, அவருடைய உன்னத சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்.
இயற்கையில் பன்முகத்தன்மை கொண்ட அவை, அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றன. குறளைப் படிக்குமாறு இளைஞர்களை நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அனைவருக்கும் எனது இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். பல நூற்றாண்டுகள் கடந்தும், அவர் போதித்த தெய்வீக ஞானமும், வாழ்க்கை பாடங்களும் இறை நம்பிக்கை நிறைந்த வாழ்க்கைக்கு வழிகாட்டின.
இந்நாள், இளைஞர்களிடையே அவரது புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், திருவள்ளுவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி, “அவரது செழுமையான சிந்தனைகளும், உன்னதமான கொள்கைகளும் அனைவருக்கும் பெரும் உத்வேகம் அளிப்பவை” என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞரின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட படங்களை தனது ட்வீட்களில் பகிர்ந்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, தத்துவஞானியின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “நெறிமுறை, சமூகம், அரசியல், பொருளாதாரம், மதம், தத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் களஞ்சியத்திற்கு எங்களது பணிவான மரியாதை. அறிவு – பெரிய திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் என்ற விதிவிலக்கான உரை மனித குலத்திற்கு உத்வேகம் அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, “திருவள்ளுவரின் பல போதனைகளை அனைவரும் நினைவுகூர வேண்டும். அவரது போதனைகள் நம்மை சன்மார்க்க பாதையில் வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் உந்துதலாகவும் இருக்கிறது. அவருடைய படைப்புகளை இளைஞர்கள் படிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “உலக மறையான திருக்குறளை மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களுக்கு திருக்குறளின் சிறப்பை எடுத்துரைத்தார்.
பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம்.
அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன், “’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என்பதைப் போதித்த சமத்துவச் சிந்தனையாளர் #அய்யன்_திருவள்ளுவர். அவரின் சிறப்பைப் போற்றும் உன்னத நாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் எமது இனிய வாழ்த்துகள். HapppyValluvarDay” எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லி பாஜக தலைவர் விஷ்ணு மிட்டல் தனது ட்விட்டர் பக்கத்தில், “மனித குலத்திற்கு வழிகாட்டும் சிறந்த தமிழ் இலக்கியமான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவரை நினைவு கூறும் வகையில் #திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் மாபெரும் ஞானியை வணங்குவோம், அவருடைய போதனைகளை உள்வாங்க முயற்சிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
புதுடெல்லியில் டெல்லி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் படங்களைப் பகிர்ந்துள்ள பாஜக தலைவர் குஷ்பு, “இன்று புதுடெல்லியில் உள்ள #டெல்லி தமிழ்ச்சங்கத்தில் #திருவள்ளுவருக்கு எனது மரியாதையை செலுத்தினேன். அன்பான வரவேற்பிற்கு சங்கத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏 #திருவள்ளுவர்டே” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/