பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பா.ஜ.க பொதுக் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் அதிவேக ஈணுலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக் கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் குழுமியிருந்த பா.ஜ.க தொண்டர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மோடி பங்கேற்ற பொதுக் கூட்ட மேடையின் முகப்பு பக்கத்தில் மீண்டும் மோடி சர்க்கார் என எழுதப்பட்டு இருந்தது.
விழாவில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழ் தொன்மையானது என உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் மோடி. தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறார் எனக் கூறினார்.
விழாவில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர், 142 மக்களுமே மோடியின் குடும்பம் தான். பா.ஜ.க 400 சீட்டுகளுக்கு மேல் வெல்லும். தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.,க்களை நாம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக மோடிக்கு காஞ்சிபுரம் பட்டு சால்வையை அண்ணாமலை அணிவித்தார்.
கூட்டத்தில் மோடி உரையாற்றும்போது, பா.ஜ.க தொண்டர்கள் மொபைல் டார்ச் அடித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
திடீரென மோடி தமிழில் பேசினார். இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள், எழுந்து நின்று, மோடி, மோடி என கோஷம் எழுப்பினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“