மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தென்மாநிலங்களில் பா.ஜ.க அதிக இடங்களை பெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி அடிக்கடி இந்தப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் பிரதமர் மோடி இன்று கோவைக்கு வருகை தருகிறார். இங்கு பா.ஜ.க.,வினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட சாலை வாகனப் பேரணியில் பங்கேற்கிறார். கோவை சாய்பாபா கோவில் சந்திப்பு பகுதியில் தொடங்கும் ரோட் ஷோ நிகழ்ச்சியானது ஆர்.எஸ் புரம் தபால் நிலையம் வரை 2.5 கீ.மி தூரத்திற்கு நடைபெறுகிறது.
இதனையடுத்து பிரதமரை வரவேற்க சாலைகளில் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பா.ஜ.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரோட் ஷோ மாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 18, 2024 20:40 IST1998 கோவை குண்டுவெடிப்பு; மோடி அஞ்சலி
1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆர்.எஸ். புரத்தில் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்தினார்.
-
Mar 18, 2024 18:42 ISTதிருவள்ளூவர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு குஜராத் சமாஜ் அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்ட திருவள்ளூவர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டது.
பின்னர் அந்தக் காவி துண்டு அகற்றப்பட்டு வெள்ளை துண்டு அணிவிக்கப்பட்டது. -
Mar 18, 2024 16:32 ISTபிரதமரை காண லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் - வானதி சீனிவாசன்
கோவை வரும் பிரதமரை நேரில் காண லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
-
Mar 18, 2024 15:55 ISTகோவை குண்டுவெடிப்பு நினைவிடத்தில் மோடி அஞ்சலி
கோவையில் சாலை பேரணியில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி, பேரணியின் நிறைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்துகிறார்.
-
Mar 18, 2024 15:04 ISTமோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியை தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டியது - அண்ணாமலை
தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணக்கமாக இருந்து இந்த பேரணி நடத்தப்பட இருக்கிறது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
Mar 18, 2024 14:50 ISTமோடி ரோடு ஷோ; அண்ணாமலை பேட்டி
இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பா.ஜ.க.,வினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனை மக்கள் தரிசன யாத்திரை என நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Mar 18, 2024 14:25 ISTபா.ஜ.க கூட்டணிக்கு தென் மாநிலங்களில் நல்ல ஆதரவு உள்ளது - மோடி
நான் இன்று ஜக்தியால் மற்றும் ஷிவமொக்காவில் நடைபெறும் பேரணிகளில் பேசுகிறேன். பின்னர் மாலையில் கோவையில் நடைபெறும் சாலைக் கண்காட்சியில் கலந்து கொள்கிறேன். அது தெலுங்கானா, கர்நாடகா அல்லது தமிழ்நாடாக இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக விதிவிலக்கான உற்சாகம் உள்ளது.
I will be addressing rallies in Jagtial and Shivamogga today. Later in the evening, will join the roadshow in Coimbatore. Be it Telangana, Karnataka or Tamil Nadu, there is exceptional fervour in the NDA’s favour.
— Narendra Modi (@narendramodi) March 18, 2024 -
Mar 18, 2024 13:52 ISTபாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்
கோவைக்கு இன்று பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.