Advertisment

மத்திய அமைச்சரானார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
PM Modi cabinet extension, 43 new leaders takes oath as union ministers, L murugan became union minister, பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை விரிவாக்கம், எல் முருகன், பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்பு, 43 அமைச்சர்கள் பதவியேற்பு, l murugan takes oath as union minister, tamil nadu bjp president l murugan get cabinet berth, tamil nadu bjp president l murugan became union minister

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதியதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வதால், ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த, ஹர்ஷ்வர்தன், ரமேஷ் பொக்ரியால், தாவர் சந்த் கெலாட், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட 14 அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதியதாக 43 மத்திய அமைச்சர்கள் இடம் பெற உள்ளதாக பட்டியல் வெளியானது. இதனிடையே, மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ள தலைவர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இதையடுத்து, 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள்: 1. நாரயண் தது ரானே, 2. சர்பானந்தா சோனோவல், 3. வீரேந்திர குமார், 4. ஜோதிராதித்ய சிந்தியா, 5. ராம்சந்திர பிரசாத் சிங், 6. அஸ்வினி வைஷ்ணவ், 7. பசுபதி குமார் பரஸ், 8. கிரண் ரிஜிஜு, 9. ராஜ்குமார் சிங், 10. ஹர்தீப் சிங் பூரி, 11. மன்சுக் மண்டவியா, 12. பூபேந்தர் யாதவ், 13. பர்ஷோத்தம் ரூபாலா, 14. கிஷன் ரெட்டி, 15. அனுராக் சிங் தாக்கூர், 16. பங்கஜ் சௌதரி, 17. அனுபிரியா சிங் படேல், 18. சத்யபால் சிங் பாகேல், 19. ராஜீவ் சந்திரசேகர், 20. ஷோபா கரண்ட்லேஜே, 21. பானு பிரதாப் சிங் வெர்மா, 22. தர்ஷன விக்ரம் ஜர்தோஷ், 23. மீனாட்சி லேகி, 24. அன்பூர்னா தேவி, 25.ஏ.நாராயணசாமி, 26. கவுஷல் கிஷோர் 27. அஜய் பாட், 28. பி.எல்.வெர்மா, 29. அஜய் குமார், 30. சௌகான் தேவுசிங், 31.பகவந்த் குபா, 32. கபில் மோரேஷ்வர் பாட்டீல், 33. பிரதிமா பொமிக், 34.சுபாஸ் சர்க்கார், 35. பகவத் கிஷன்ராவ் கரத் 36. ராஜ்குமார் ரஞ்சன் சிங், 37.பாரதி பிரவின் பவார், 38.பிஷ்வேஷ்வர் துடு, 39.சாந்தனு தாக்கூர், 40.முஞ்சபார மஹேந்திரபாய், 41. ஜான் பர்லா, 42. எல்.முருகன் 43.நிதிஷ் பிரமானிக் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து 7 பேரும் குஜராத் மாநிலத்தில் இருந்து 5 பேரும் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதனால், இன்று பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் எதிமுக வேட்பாளர் கயல்விழியை எதிர்த்து போட்டியிட்டு மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தமிழிசை சௌந்தரராஜனுக்குப் பிறகு தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பதவியேற்ற எல்.முருகன், மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு செயல்பட்டார். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது. இதையடுத்து, அதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை நடத்தி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, திமுகவில் இருந்து கு.க.செல்வம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோரை பாஜகவில் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல ஆண்டுகளுக்கு பிறகு பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்று பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நுழையக் காரணாமாக இருந்தார்.

சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள எல்.முருகன், பாஜக மாநில தலைவராவதற்கு முன்பு தேசிய எஸ்சி. எஸ்டி ஆணையத் தலைவராக இருந்து பணி புரிந்துள்ளார்.

இந்த நிலையில்தான், பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகன் இடம்பெற்றுள்ள பட்டியல் வெளியானது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment