PM Modi Chennai visit, Stalin attends inaugural function Live Updates: தமிழகத்தில் ரூ.31400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின். தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் மேலும் இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் மோடி:
பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:30 (IST) 26 May 2022இலங்கை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா எப்போதும் துணை நிற்கும்: பிரதமர் மோடி
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இலங்கை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா எப்போதும் துணை நிற்கும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- 20:29 (IST) 26 May 2022ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
கட்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஹிந்திக்கு இணையான தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் * தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 20:27 (IST) 26 May 2022ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
கட்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஹிந்திக்கு இணையான தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் * தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 19:25 (IST) 26 May 2022வணக்கம்' என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதில் அவர் உரையாற்றும்போது வணக்கம்' என தமிழில் உரையை தொடங்கினார். தொடர்ந்து தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது என்றும் கூறியுள்ளார்.
- 18:55 (IST) 26 May 2022இதுதான் திராவிட மாடல் - மு.க. ஸ்டாலின்
சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் திராவிட மாடல் ஆட்சி குறித்த விளக்கத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். உரையின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோரை வரவேற்றார் முதல்வர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி பங்கேற்கக்கூடிய முதல் அரசுவிழா இது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை தொடக்கிவைப்பதற்காக வருகை தந்துள்ளமைக்கு தமிழ்நாடு மக்கள் சார்பிலும், முதல்வர் என்ற அடிப்படையிலும் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் தொடக்கிவைக்கவுள்ள திட்டங்கள் அனைத்தும் மிக முக்கியமானத் திட்டங்கள்.
தமிழ்நாடு பல்வேறு வகைகளில் ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது. நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டினருடைய வளர்ச்சி மிகமிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி.
பொருளாதார வளர்ச்சி, கிராமப்புற சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுவது, பெரிய எண்ணிக்கையில் கல்வி நிலையங்கள், திறன் மிகுந்த மனித வளங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலம். பொருளாதார மற்றும் இதர விஷயங்களில் மட்டுமல்ல சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றுக்கும் தமிழ்நாடு முன்மாதிரி.
உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இதுதான் திராவிட மாடல்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
- 18:42 (IST) 26 May 2022தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 18:37 (IST) 26 May 2022தமிழகத்தின் பங்களிப்புக்கு ஏற்ப ஒன்றிய அரசு வருவாயை உயர்த்த வேண்டும் - மு.க. ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்: ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து தமிழகத்திற்கு 1.12 விழுக்காடு மட்டுமே தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தின் பங்களிப்புக்கு ஏற்ப ஒன்றிய அரசு வருவாயை உயர்த்த வேண்டும்.
- 18:31 (IST) 26 May 2022மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது - மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதார ரீதியானது மட்டுமல்ல, சமூகநீதி, பெண்கள், சமத்துவம் போன்றவற்றின் மேம்பாட்டை உள்ளடக்கியது. இதுதான் திராவிட மாடல்.
- 18:29 (IST) 26 May 2022விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றி வருகிறார்.
விழாவில் மு.க. ஸ்டாலின் உரை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் விழா இதுதான். தமிழ்நாட்டில் 5 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், பைப்லைன் திட்டம், தொடங்கி வைக்கும் பிரதமருக்கு நன்றி.
- 18:27 (IST) 26 May 2022விழாவில் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரை
விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றி வருகிறார்.
- 18:21 (IST) 26 May 2022மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை
பிரதமர் மோடி பங்கேற்றுவரும் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை நிகழ்த்தி வருகிறார்.
- 18:19 (IST) 26 May 2022நிகழ்ச்சி தொடங்கியது; ஒரே மேடையில் மோடி - ஸ்டாலின்
நேரு ஸ்டேடியத்தில் விழா தொடங்கியது. ஒரே மேடையில் பிதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றனர்.
- 18:12 (IST) 26 May 2022விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தடைந்தார் மோடி
சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில், விழா நடக்கும் பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
- 18:08 (IST) 26 May 2022பிரதமர் மோடி கார் மீது ரோஜா மலர்களைத் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு கார் மீது ரோஜா மலர்களைத் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- 17:59 (IST) 26 May 2022பிரதமர் மோடிக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு
சிவானந்தா சாலை, சென்னை செண்ட்ரல் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
- 17:49 (IST) 26 May 2022மக்களைப் பார்த்து கையசைத்து மோடி உற்சாகம்
சாலை ஓரம் திரண்டு வரவேற்பு அளித்த மக்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
- 17:39 (IST) 26 May 2022வழிநெடுக திரண்டு வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் மோடி
சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்தில் இருந்து பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சாலை மார்க்கமாக காரில் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு வழிநெடுக திரண்டு வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் மோடி
- 17:32 (IST) 26 May 2022அடையாறில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார் மோடி
சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்தில் இருந்து பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். வழி நெடுக பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர்.
- 17:25 (IST) 26 May 2022பிதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்தில் இருந்து பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழி எங்கும் பாஜகவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
- 17:18 (IST) 26 May 2022அடையாறு கடற்பனை தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு புறப்பட்டார் மோடி
சென்னை ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்துக்கு வந்த பிரதமர் மோடி, பெரியமேடுவில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சாலை மார்க்கமாகப் புறப்பட்டார்.
- 17:15 (IST) 26 May 2022பிரதமரை வரவேற்க வண்ணமயமான சென்னை சாலைகள்
பிரதமர் வருகையால் அவரை வரவேற்க கண் கவரும் குழந்தைகளின் அழகிய நடனம் மற்றும் கலைநிகழ்ச்சியால் சென்னை சாலைகள் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.
- 17:11 (IST) 26 May 2022ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர்.
- 17:10 (IST) 26 May 2022சென்னை ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் பிரதமரை மு.க. ஸ்டாலின் வரவேற்றார்
சென்னை ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
- 17:04 (IST) 26 May 2022சென்னை வருகை பிரதமர் மோடி... வரவேற்க விழாக்கோலம் பூண்டது சென்னை
ரூ.31.400 கோடி மதிப்பில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்க சென்னையில் விமான நிலையம் முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் இருக்கும் பகுதி வரை பாஜகவினர் வரவேற்க திரண்டுள்ளனர். பிரதமரை வரவேற்க அமைச்சர்கள் விமான நிலையம் சென்றுள்ளனர்.
- 16:57 (IST) 26 May 2022சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
ஹைதராபாத்தில் இருந்து தனி விமான நிலையம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமரை வரவேற்க அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனைவரும் விமான நிலையம் வந்தனர்.
- 16:55 (IST) 26 May 2022பிரதமரை வரவேற்க விமான நிலையம் வந்த இ.பி.எஸ்
பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.
- 16:44 (IST) 26 May 2022மோடி நிகழ்ச்சி: நேரு ஸ்டேடியத்தில் திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி கோஷம்
பிரதமர் நிகழ்ச்சி நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் அருகே திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டிபோட்டுக்கொண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோஷமிட வேண்டாம் என தொண்டர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- 16:42 (IST) 26 May 2022ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் மோடி
பிரதமர் மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். தமிழ்நாட்டில் ரூ.31,400 கோடி மதிப்பில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- 16:31 (IST) 26 May 2022சென்னை வரும் பிரதமர் மோடியை, ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சென்னை வரும் பிரதமர் மோடியை, ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். ஆளுநர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் வரவேற்பு அளிக்கின்றனர். விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு, அமைச்சர் துரை முருகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு தளம் வரும் பிரதமர், கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு செல்கிறார்.
- 15:03 (IST) 26 May 2022சேலத்தில் இருந்து டெல்லி பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் வர உள்ள நிலையில், சேலத்திலிருந்து டெல்லி பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சேலம் தலைமை தபால் நிலையத்திலிருந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான கடிதம் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளது. இதுகுறித்து மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14:26 (IST) 26 May 2022தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் - பிரதமர் மோடி
தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும். குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்
- 14:22 (IST) 26 May 2022பிரதமர் மோடி சென்னை வருகை; சிறப்பு விருந்தினர்கள் விவரம்
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். இதேபோல் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் கலந்துக் கொள்கின்றனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கின்றனர்.
- 14:16 (IST) 26 May 2022பிரதமர் மோடி வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. சென்னையில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- 13:41 (IST) 26 May 2022பிரதமர் மோடி வருகை; தமிழக பாஜக ஆலோசனை
பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், சி.டி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
- 13:22 (IST) 26 May 2022பிரதமர் மோடியை நன்றியுடன் தமிழக மக்கள் மனதார வரவேற்கின்றனர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியை நன்றியுடன் தமிழக மக்கள் மனதார வரவேற்கின்றனர். ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கான நல்வாழ்வு நடவடிக்கைகளை தமிழர்கள் வரவேற்றுள்ளனர் என பிரதமரின் சென்னை வருகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட் செய்துள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.