பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தி நம்பிக்கைய ஏற்படுத்த தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளில் விளக்கு ஏற்றினர்.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று முன் தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையைக் காட்ட அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்துவிட்டு 9 நிமிடங்கள் அகல்விளக்கு, மெழுகு வர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இன்று இரவும் 9 மணிக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் வீடுகளில் மின் விளக்குகளை அனைத்துவிட்டு 9 நிமிடங்களுக்கு அகல்விளக்கு ஏற்றி ஒளிரச் செய்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
பிரதமர் வேண்டுகோள் விடுத்தபடி, அரசியல் தலைவர்கள், பிரலங்கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில், இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அனைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகு வர்த்தியை ஏற்றி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்த டெல்லியில் நம்பிக்கை விளக்கேற்றினார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் விளக்கு ஏற்றினார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/eps1-1-300x208.jpg)
தமிழகத்தில், முதல்வர் எடப்படி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏந்தி தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் நம்பிக்கை விளக்கேற்றினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நம்பிக்கை விளக்கேற்றினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜ்பவனில் தனது இல்லத்தில் விளக்கேற்றினார்.
அதே போல, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றினர். அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் தனது வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் விளக்கேற்றினார். அமைச்சர்கள் பலரும் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/rajini2-1-225x300.jpg)
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் மனைவி லதாவுடன் மெழுகுவர்த்தி ஏற்றினார். பின்னர், ரஜினிகாந்த், தனது வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி கையில் உயர்த்திப் பிடித்து நின்று ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
அதே போல, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வீட்டில் குடும்பத்தினருடன் விளக்கு ஏற்றினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”