வேலூரில் இருந்து மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய தந்தை; பிரதமர் மோடி அளித்த இன்ப அதிர்ச்சி
PM Modi congratulatory letter surprised: வேலூரைச் சேர்ந்த டி.ராஜசேகரன் என்பவர் தனது மகளின் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பிய நிலையில் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடியிடம் இருந்து வாழ்த்துச் செய்தியை பெற்றிருக்கிறார்.
PM Modi congratulatory letter to Wedding invitee: வேலூரைச் சேர்ந்த டி.ராஜசேகரன் என்பவர் தனது மகளின் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பிய நிலையில் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடியிடம் இருந்து வாழ்த்துச் செய்தியை பெற்றிருக்கிறார்.
Advertisment
வேலூரைச் சேர்ந்த டி.ராஜசேகரன் மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகள் மருத்துவர் ராஜஸ்ரீக்கும் மருத்துவர் மணமகன் சுத்ரசனுக்கும் செப்டம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகளை செய்துவந்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் மீது மிகுந்த அபிமானம் உள்ளவர். பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வேலைப்பளு காரணமாக அவரால் திருமணத்திற்கு வர முடியாது என்று அறிந்திருந்தாலும் பிரதமர் மோடி மீதுள்ள அபிமானம் காரணமாக அவருக்கு தனது மகளின் திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். நாளை திருமணம் நடைபெற உள்ளதால் ராஜசேகரன் திருமண வேலைகளில் மும்முரமாக இருந்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த சனிக்கிழமை ராஜசேகரனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வந்து சேர்ந்தது. அது என்னவென்றால், அவருடை மகளின் திருமணத்துக்கு பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து வாழ்த்துக்கடிதம் வந்துள்ளது. இதனால், மொத்த திருமண வீடும் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க...
நாட்டின் பிரதமர் மோடி, தான் அனுப்பிய திருமண அழைப்பிதழுக்கு மதிப்பளித்து தனது மகளின் திருமணத்துக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதால் ராஜசேகரன் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை லேமினேட் செய்து தனது வீட்டின் ஹாலில் அனைவரும் பார்க்கும் விதமாக மாட்டி வைக்கப்போவதாக ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடைகோடியில் இருப்பவர் ஒருவர் அனுப்பிய திருமண அழைப்பிதழுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.