கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டக்டர்கள், செவிலியர்கள் உடன் உரையாடிய பிரதமர் மோடி, தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவர் ஒருவருடன் கொரோனாவைத் தடுக்க ஆயுஷ் மருத்துவத்தில் வாய்ப்புகள் உள்ளதா என்று கேட்டறிந்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி, மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளான 900-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழும் பலி எண்ணிக்கையை குறைக்க அரசு மருத்துவ நிறுவனங்களும் தனியார் மருத்துவ நிறுவனங்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, அலோபதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தனியா மருந்து இல்லாத நிலையில், ஏற்கெனவே உள்ள மருந்துகளை அளித்து சிகிச்சை அளித்து வருகின்றன.
இந்த சூழலில் ஆயூஷ் மருத்துவர்களான சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் தங்கள் மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கொரோனா வராமல் தடுக்க மருந்து அளிக்க முடியும் என்று கூறிவருகின்றனர்.
இந்த நிலையில்தான், பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சைஅளிக்கும் மருத்துவத் துறையினருடனும் ஆயூஷ் மருத்துவருடனும் காணொலி காட்சி மூலம் உரையாடி அவர்கள் கருத்தைக் கேட்டு குறிப்பெடுத்துள்ளார்.
அந்த வகையில், பஞ்சாப்பில் ஒரு நர்ஸுக்கு போன் செய்த பிரதமர் மோடி அவருடைய அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு அவரைப் பாராட்டினார்.
அந்த வரிசையில் பிரதமர் மோடி, தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவமனான சித்த மருத்துவரான டாக்டர் ஜெயபிரகாஷ் உடன் நேரலையில், பேசி கொரோனா வைரஸ் தடுப்புக்கு யாவேண்டுமானல் தடுப்பூசி
வணக்கம், உங்கள் பொன்னான நேரத்தை அளித்தௌ இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. ஏற்கேனவே நான் இந்த வைத்தியத்தியங்களை பரிந்துரைத்துள்ளேன். அதன்படி, நான் 7 விஷயங்களை மட்டும் உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். ஒன்று நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்போது நாம் வருமுன் தடுப்பு மருந்துகளை கொடுப்பதிலிருந்து தொடங்கலாம். ஒரு முறை பரிசோதிக்கப்பட்ட ஒரு எளிய வைத்தியம் உள்ளது. நீங்கள் முக்கியமாக பரஸ்பரம் சொன்னதுபோல, இந்த நூற்றாண்டில் சேகரித்த ஆவணங்களை போதுமான அளவில் பெற்றுள்ளோம். நாம் அவற்றைத் (வைரஸ் தொற்று) தடுக்க தொடங்கலாம். ஆயூஷ் அமைச்சகர் 8 லட்சம் வைத்தியர்களையும் 80,000 பணியாளர்களையும் கொண்டுள்ளது. அவர்களுடன் ஆஷா பணியாளர்கள் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, நாம் அவர்களுக்கு எளிய வைத்தியத்தை பரிந்துரைக்கத் தொடங்கினால் அவர்கள் இதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். இந்த வைரஸ் பற்றி நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி ஆதாரங்களின் குறைபாடு ம்
மூன்றவாது சமர்பிப்பு. நீங்கள் ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஆதாரங்களின் குறைபாடு. முக்கியமான பிரச்னைகளில் ஒன்று இது. இதுதான் நாம் ஆதாரங்களை உருவாக்குவதற்கான ஒரே வழி. ஒரு 5 நோயாளிகள் கொடுக்கப்பட்டால் அவர்களுடன் மற்றவர்களும் அலோபதி மருத்துவர்களும் சேர்ந்து சோதனை செய்யலாம். நாம் அவர்களுக்கு மருந்துகளை அளிப்போம். ஆனால், மேற்கத்திய மருந்துகள் எந்த தீர்வுகளையும் தராது. ஆயுர்வேதம் நீண்டகால நாள்பட்ட நோய், சுவாச நோய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்றவற்றுக்கு பல வைத்திய தீர்வுகளைக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் இதற்கு ஆவணங்கள் செய்ய முடியும். 47 ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பை பரிசீலிக்க செய்தேன். அந்த நாட்களில் என்ன இருந்ததோ அவை இன்றும்கூட அப்படியே உள்ளது. அமெரிக்காவின் சிறந்த ஆய்வாளரான பேராசிரியர் விட்லே தனது 33 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு, மேற்கத்திய மருத்துவத்தைவிட திறனுடன் பக்களவிளைவுகள் இல்லாத இந்திய மருத்துவம் இந்த உலகத்துக்கு வழிகாட்டுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வார்டுகளை ஆயுர்வேத கல்லூரிகளில் உருவாக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள், மாணவர்கள் தனிமைப்படுத்தல் பணியில் உங்களுடன் ஈடுபடுவதற்கு தயாராவார்கள்.
இன்டஸ்ட்ரீஸ்களில் இந்த மருத்துகள் தயாரிக்கபப்ட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும். ஆயூஷ் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கும் வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதை நிறுத்திவிட்டோம். போன்மூலம் அல்லது வெப் கேமிரா மூலம் பேசி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம். அதனால், சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கப்படுகிறது.
ஆயுஷ் மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களுடன் சேர்ந்து குழுக்களாக இணைந்து இந்தியாவில் எங்கேல்லாம் இந்திய மருத்துவத்தில் குறைபாடுகள் உள்ள இடங்களை ஆய்வு செய்யலாம். பெரிய பெரிய ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி செய்த மாணவர்களின் ஆய்வேட்டில் இடம்பெற்றுள்ள தகவல்களை எடுத்து அதன் மூலமாக இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்யலாம்.
ஆயுஷ் டாக்டர்கள், அலோபதி டாக்டர்கள் கண்காணிப்பின் கீழ் எங்கெல்லாம இந்த நோய் அதிக அளவில் பரவியிருக்கிறதோ அங்கே உள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ் மருத்துவத்தில் உள்ள 5-6 மாத்திரைகளைத் தருவதற்கு முயற்சி செய்யலாம். 21 நாட்களில் சரியாகிவிடும். சரியாகா விட்டாலும் அவர்கள் அதை தொடர்ந்து உணவு போல எடுத்துக்கொள்ளலாம். அதனால், பக்கவிளைவுகள் இல்லை. மருந்து கொடுத்த பிறகு என்ன நடக்கிறது. என்பதை ஆவணப்படுத்த வேண்டும்.” என்று டாக்டர் ஜெயப்பிரகாஷ் பிரதமரிடம் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.