திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தோரன் என்ற இடத்தில், பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாசார மன்றம் சார்பில், திருவள்ளூர் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இந்த சூழலில் திருவள்ளூவர் சிலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயனன் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிலையில் பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அந்த பதிவில், “ பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“