Tamil News Today Live : பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் மற்றும் கேரளாவில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அர்ஜுன் பிரதான போர் டேங்க்கை (எம்கே -1 ஏ) இந்திய ராணுவத்திற்கு ஒப்படைத்தார். சென்னை மெட்ரோ திட்டம் மற்றும் கேரளாவில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் வளாகம் உள்ளிட்ட இந்த திட்டங்கள் “இந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான வேகத்தை சேர்க்கும்" எனப் பிரதம மந்திரி அலுவலகத்தின் (பி.எம்.ஓ) ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. காலை 10.30 மணி அளவில் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரை 9 கி.மீ முதலாம் கட்டம் விரிவாக்கத் திட்டம் திறக்கப்பட்ட பின்னர், பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவச பயணம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை சென்னையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இது நாம் இருவர் நமக்கு இருவர் ஆட்சி. மோடி,அமித்ஷா,அதானி,அம்பானி ஆட்சி. விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டம்,பெட்ரோல்,டீசல் விலை ரூ100,சமையல் எரிவாயு1000, பொருளாதாரம் அழிவுப் பாதையில் ,வேலை வாய்பின்மை 45 ஆண்டுகளாக இல்லாத அளவில். இதில் எங்கே வரப்பு,நீர்,நெல்,குடி,கோல் உயர?! என்று கரூர் எம்.பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
“தேர்தல் ‘ஷோ’ நடத்த வந்துள்ள பிரதமர் மோடியிடம், நீட் தேர்வு விலக்கு - எழுவர் விடுதலை - காவிரிப் பிரச்சினை - மேகதாது அணை விவகாரம் - GST இழப்பீடு - புயல் நிவாரணம் - மதுரை எய்ம்ஸ் குறித்து முதலவர் கேட்பாரா?” என மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர் நெஞ்சில் தனியிடம் பிடித்திருக்கிறீர்கள் நீங்கள். பேச்சில் தமிழும்,தமிழரிடம் அன்பும், உள்ளத்தில் தமிழ்நாட்டின் மேன்மையும் கொண்ட நீங்கள் தமிழரில் ஒருவர், தன்நிகரில்லாத தலைவர். தொடரட்டும் உங்கள் வெற்றி நடை, உங்களை தொடர்வது எங்கள் படை என பாஜக மாநில துணைத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகம் வளம்பெற உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை மக்களுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு தனது உரையில் ஔவையார்,பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடி, அரசு திட்டங்களைத் தொடங்கிவைத்த பின்னர், நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் பிரதமருக்கான அறையில் முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி மோடி ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழக மக்களை கண்டு மோடி அஞ்சுவதாலேயே சாலை மார்க்கத்தை புறக்கணித்து வான்வழியே செல்கிறார். விவசாயிகள் பிரச்னைகளை எளிதாக தீர்க்காமல் ஔவையார் பாடல்களை மேற்கோள் காட்டுவது எதிரும் புதிருமானது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
இந்த முடிவு பெயர் மாற்றத்தை விட மேலானது. இது நீதி, கண்ணியம், வாய்ப்பு ஆகியவை பற்றியது. தேவேந்திர குல சமுதாயத்தினரிடம் கலாச்சாரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. அவர்கள் நல்லிணக்கம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகின்றனர். அவர்களது நாகரிகமான இயக்கம். தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் நிரூபிப்பதாக உள்ளது.
இந்தக் கோரிக்கை மீது விரிவான ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசுக்கு நான் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட காலக் கோரிக்கைக்கு இந்த ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 2015-ல் தேவேந்திரர்களின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது. காலனி ஆதிக்கவாதிகள் அவர்களது பெருமையையும், கண்ணியத்தையும் அகற்றியது குறித்த கவலையை காணமுடிந்தது. பல தசாப்தங்களாக எதுவும் நடக்கவில்லை. பல அரசுகளிடமும் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம் நான் ஒன்றைச் சொன்னேன். அவர்களது தேவேந்திர என்னும் சொல் என்னுடைய பெயரின் நரேந்திர என்பதை ஒத்துள்ளது என்று அவர்களிடம் கூறினேன். அவர்களது உணர்வுகளை நான் புரிந்து கொள்ள முடிந்தது.
நாகை மாவட்டம் பி.ஆர்.புரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். விரக்தியில் முதலமைச்சர் பழனிசாமி பேசி வருகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகத்தின் தேவேந்திர குல வேளாளர் சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு தெரிவிக்க என்னிடம் ஒரு மகிழச்சிகரமான அறிவிப்பு உள்ளது. தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களது நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அரசியல் சாசனத்தின் பட்டியலிடப்பட்டுள்ள ஆறு, ஏழு பெயர்களில் அல்லாது, அவர்களது பாரம்பரியமான பெயரில் அவர்கள் இனி அழைக்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் திருத்தம் செய்ய அரசியல் சாசனத்தைத் திருத்தும் வரைவு அரசாணைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து விட்டது. அடுத்த அமர்வின் போது நாடாளுமன்றத்தில் இது தாக்கல் செய்யப்படும்.
நன்றி சென்னை; அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் - பிரதமர் மோடி டுவீட்
Thank you Chennai!
Overwhelmed by the affectionate welcome. pic.twitter.com/IKMzIUxNw9
— Narendra Modi (@narendramodi) February 14, 2021
7 உட்பிரிவை சேர்ந்தவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. - பிரதமர் மோடி
சென்னை அறிவுசார் மற்றும் புத்தாக்க நகரம் என பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கல்லணைக் கால்வாயை சீரமைப்பது மூலம் 2.27 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும், மிக முக்கியமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காரில் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு சாலையின் இரு புறங்களிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி சென்னை வந்தடைந்ததை வரவேற்க அதிமுக, பாஜக தொழிலாளர்கள் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் மற்றும் ஐஎன்எஸ் அடையார் வந்தடைந்தனர்.
Tamil Nadu: AIADMK, BJP workers line the streets near Jawaharlal Nehru Stadium (pic 1) & INS Adyar (pic 2&3) to welcome PM Modi on his arrival in Chennai
PM will inaugurate & lay foundation stones for several key projects & hand over Arjun Main Battle Tank (MK-1A) to the Army pic.twitter.com/FqdI60PJ5I
— ANI (@ANI) February 14, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights