Advertisment

மோடி நிகழ்ச்சி ஹைலைட்ஸ்: மேடையில் கைகோர்த்த ஓபிஎஸ் தனி ஆலோசனையில் இடம்பெறவில்லை

PM Modi in Chennai : தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
cm edappadi k palaniswami, deputy cm o panneerselvam, palaniswami o panneerselvam together traveled in same vehicle, முதல்வர் பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், ஓபிஎஸ், இபிஎஸ், ஒரே வாகனத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் பயணம், தேர்தல் பிரச்சாரம், ops eps together traveled, tirunelveli, aiadmk, election campaign, tamil nadu assembly elections 2021

Tamil News Today Live : பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் மற்றும் கேரளாவில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அர்ஜுன் பிரதான போர் டேங்க்கை (எம்கே -1 ஏ) இந்திய ராணுவத்திற்கு ஒப்படைத்தார். சென்னை மெட்ரோ திட்டம் மற்றும் கேரளாவில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் வளாகம் உள்ளிட்ட இந்த திட்டங்கள் “இந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான வேகத்தை சேர்க்கும்" எனப் பிரதம மந்திரி அலுவலகத்தின் (பி.எம்.ஓ) ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

https://indianexpress.com/article/india/pm-narendra-modi-tamil-nadu-kerala-live-updates-chennai-kochi-7187959/

சட்டமன்றத் தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. காலை 10.30 மணி அளவில் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரை 9 கி.மீ முதலாம் கட்டம் விரிவாக்கத் திட்டம் திறக்கப்பட்ட பின்னர், பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவச பயணம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை சென்னையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























Highlights

    21:29 (IST)14 Feb 2021

    சென்னை விழாவில்  பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

    பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில்  பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

    தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் ஒருதாய்மக்கள்  மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.    

    20:58 (IST)14 Feb 2021

    இதில் எங்கே வரப்பு,நீர்,நெல்,குடி,கோல் உயர?! - கரூர் எம்.பி ஜோதிமணி விமர்சனம்

    இது நாம் இருவர் நமக்கு இருவர் ஆட்சி. மோடி,அமித்ஷா,அதானி,அம்பானி ஆட்சி. விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டம்,பெட்ரோல்,டீசல் விலை ரூ100,சமையல் எரிவாயு1000, பொருளாதாரம் அழிவுப் பாதையில் ,வேலை வாய்பின்மை 45 ஆண்டுகளாக இல்லாத அளவில். இதில் எங்கே வரப்பு,நீர்,நெல்,குடி,கோல் உயர?! என்று கரூர் எம்.பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.   

    20:10 (IST)14 Feb 2021

    மதுரை எய்ம்ஸ் குறித்து முதலவர் கேட்பாரா? - மு. க ஸ்டாலின்

    “தேர்தல் ‘ஷோ’ நடத்த வந்துள்ள பிரதமர் மோடியிடம்,  நீட் தேர்வு விலக்கு - எழுவர் விடுதலை - காவிரிப் பிரச்சினை - மேகதாது அணை விவகாரம் - GST இழப்பீடு - புயல் நிவாரணம் - மதுரை எய்ம்ஸ் குறித்து முதலவர் கேட்பாரா?” என மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.   

    18:39 (IST)14 Feb 2021

    பிரதமர் மோடியுடன் பங்காரு அடிகளார் சந்திப்பு!

    இன்று சென்னைக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தவத்திரு பங்காரு அடிகளார் சந்தித்தார்.  

    18:37 (IST)14 Feb 2021

    தொடரட்டும் உங்கள் வெற்றி நடை, உங்களை தொடர்வது  எங்கள் படை - கே. அண்ணாமலை

    தமிழர் நெஞ்சில் தனியிடம் பிடித்திருக்கிறீர்கள் நீங்கள். பேச்சில் தமிழும்,தமிழரிடம் அன்பும், உள்ளத்தில் தமிழ்நாட்டின் மேன்மையும் கொண்ட நீங்கள் தமிழரில் ஒருவர், தன்நிகரில்லாத தலைவர்.  தொடரட்டும் உங்கள் வெற்றி நடை, உங்களை தொடர்வது  எங்கள் படை என பாஜக மாநில துணைத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.    

    18:35 (IST)14 Feb 2021

    தமிழக மக்கள் சார்பாக பிரதமருக்கு உளமார்ந்த நன்றி - ஒ. பன்னீர்செல்வம்

    தமிழகம் வளம்பெற உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை மக்களுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு தனது உரையில் ஔவையார்,பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.   

    18:29 (IST)14 Feb 2021

    முதல்வருடன் தனியாக ஆலோசித்த பிரதமர் மோடி: கூட்டணி குறித்து பேசியதாக தகவல் 

    சென்னை வந்த பிரதமர் மோடி, அரசு திட்டங்களைத் தொடங்கிவைத்த பின்னர், நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் பிரதமருக்கான அறையில் முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி மோடி ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை.

    18:05 (IST)14 Feb 2021

    பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கடும் விமர்சனம்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழக மக்களை கண்டு மோடி அஞ்சுவதாலேயே சாலை மார்க்கத்தை புறக்கணித்து வான்வழியே செல்கிறார். விவசாயிகள் பிரச்னைகளை எளிதாக தீர்க்காமல் ஔவையார் பாடல்களை மேற்கோள் காட்டுவது எதிரும் புதிருமானது” என்று விமர்சனம் செய்துள்ளார்.

    17:42 (IST)14 Feb 2021

    பிப்.25ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் - பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தகவல்

    பிரதமர் மோடி பிப்ரவரி 25ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார் என்று பஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தகவல் தெரிவித்துள்ளார்.

    17:40 (IST)14 Feb 2021

    தேவேந்திர குல வேளாளர் சமுதயாம் குறித்து பிரதமர் ஆற்றிய உரை ( 3/3)

    இந்த முடிவு பெயர் மாற்றத்தை விட மேலானது.  இது நீதி, கண்ணியம், வாய்ப்பு ஆகியவை பற்றியது.  தேவேந்திர குல சமுதாயத்தினரிடம் கலாச்சாரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. அவர்கள் நல்லிணக்கம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகின்றனர்.  அவர்களது நாகரிகமான இயக்கம். தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் நிரூபிப்பதாக உள்ளது. 

    17:40 (IST)14 Feb 2021

    தேவேந்திர குல வேளாளர் சமுதயாம் குறித்து பிரதமர் ஆற்றிய உரை ( 2/2)

    இந்தக் கோரிக்கை மீது விரிவான ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசுக்கு நான் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீண்ட காலக் கோரிக்கைக்கு இந்த ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் 2015-ல் தேவேந்திரர்களின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது.  காலனி ஆதிக்கவாதிகள் அவர்களது பெருமையையும், கண்ணியத்தையும் அகற்றியது குறித்த கவலையை காணமுடிந்தது. பல தசாப்தங்களாக எதுவும் நடக்கவில்லை.  பல அரசுகளிடமும் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.  அவர்களிடம் நான் ஒன்றைச் சொன்னேன்.  அவர்களது தேவேந்திர என்னும் சொல் என்னுடைய பெயரின் நரேந்திர என்பதை ஒத்துள்ளது என்று அவர்களிடம் கூறினேன்.  அவர்களது உணர்வுகளை நான் புரிந்து கொள்ள முடிந்தது.

    17:39 (IST)14 Feb 2021

    மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் - மு.க.ஸ்டாலின்

    நாகை மாவட்டம் பி.ஆர்.புரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். விரக்தியில் முதலமைச்சர் பழனிசாமி பேசி வருகிறார்.” என்று தெரிவித்துள்ளார். 

    17:39 (IST)14 Feb 2021

    தேவேந்திர குல வேளாளர் சமுதயாம் குறித்து பிரதமர் ஆற்றிய உரை.

    இன்று தமிழகத்தின் தேவேந்திர குல வேளாளர் சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு தெரிவிக்க என்னிடம் ஒரு மகிழச்சிகரமான அறிவிப்பு உள்ளது.  தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களது நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    அரசியல் சாசனத்தின் பட்டியலிடப்பட்டுள்ள ஆறு, ஏழு பெயர்களில் அல்லாது, அவர்களது பாரம்பரியமான பெயரில் அவர்கள் இனி அழைக்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் திருத்தம் செய்ய அரசியல் சாசனத்தைத் திருத்தும் வரைவு அரசாணைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து விட்டது.  அடுத்த அமர்வின் போது நாடாளுமன்றத்தில் இது தாக்கல்  செய்யப்படும்.

    14:09 (IST)14 Feb 2021

    பிரதமருடனான ஆலோசனையில் பங்கேற்காத துணை மு்தல்வர்

    நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் சுமார் 10 நிமிடங்கள் தனியாக பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு என தகவல் இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை

    14:06 (IST)14 Feb 2021

    பிரதமர் மோடி ட்விட்

    நன்றி சென்னை; அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் - பிரதமர் மோடி டுவீட்

    14:03 (IST)14 Feb 2021

    இந்திய மீனவர்களை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம் - பிரதமர் மோடி

    இந்திய மீனவர்களை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம்; மீன்பிடி தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன - பிரதமர் மோடி

    14:02 (IST)14 Feb 2021

    தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் - பிரதமர் மோடி

    7 உட்பிரிவை சேர்ந்தவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.  - பிரதமர் மோடி

    14:01 (IST)14 Feb 2021

    இலங்கை தமிழர்கள் குறித்து மோடி கருத்து

    இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனை, மத்திய அரசு உறுதி செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    13:59 (IST)14 Feb 2021

    மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை - பிரதமர் மோடி

    இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டு்ளளார்.

    13:48 (IST)14 Feb 2021

    விழா முடிவில் கைகளை உயர்த்தி பிரதமர் முதல்வர் துணை முதல்வர் மகிழ்ச்சி

    publive-imageசென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா முடிவில் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை உயர்த்தி மகிழ்ச்சி

    13:10 (IST)14 Feb 2021

    ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

    2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் புல்வாமா தாக்குதல் நடந்தது; நமது பாதுகாப்பு படைவீர‌ர்களை நினைத்து பெருமை கொள்வோம். இந்திய வீர‌ர்களின் துணிச்சல், வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து வழிகாட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    12:59 (IST)14 Feb 2021

    கல்லணை கால்வாய் திட்டத்திற்கு பாராட்டு தொிவித்த பிரதமர் மோடி

    தமிழக விவசாயிகளின் நீர் மேலாண்மையை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி,  கல்லணை கால்வாய் திட்டம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் பழங்கால எடுத்துக்காட்டு என புகழாரம் சூட்டியுள்ளார். 

    12:57 (IST)14 Feb 2021

    பாராதியார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர்

    ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம்.. கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    12:57 (IST)14 Feb 2021

    சென்னை அறிவுசார் மற்றும் புத்தாக்க நகரம்- பிரதமர் மோடி பாராட்டு

    சென்னை அறிவுசார் மற்றும் புத்தாக்க நகரம் என பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  கல்லணைக் கால்வாயை சீரமைப்பது மூலம் 2.27 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும், மிக முக்கியமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

    12:55 (IST)14 Feb 2021

    ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர்

    வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும்...,!! என்ற ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். 

    12:54 (IST)14 Feb 2021

    மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி - பிரதமர் மோடி

    சென்னைக்கு நான் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

    12:23 (IST)14 Feb 2021

    மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்

    publive-imageசென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    12:22 (IST)14 Feb 2021

    துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமருக்கு புகழாரம்

    publive-imageபிரதமர் மோடியை போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    12:19 (IST)14 Feb 2021

    எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயல‌லிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மரியாதை

    publive-imageசென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயல‌லிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை 

    12:14 (IST)14 Feb 2021

    பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு

    publive-imageபிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்

    11:48 (IST)14 Feb 2021

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

    publive-image8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காரில் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு சாலையின் இரு புறங்களிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    11:13 (IST)14 Feb 2021

    அதிமுக, பாஜக தொழிலாளர்கள் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் வந்தடைந்தனர்

    பிரதமர் மோடி சென்னை வந்தடைந்ததை வரவேற்க அதிமுக, பாஜக தொழிலாளர்கள் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் மற்றும் ஐஎன்எஸ் அடையார் வந்தடைந்தனர்.

    11:06 (IST)14 Feb 2021

    பாதுகாப்பு பணியில் பத்தாயிரம் போலீசார்

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    11:00 (IST)14 Feb 2021

    தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மோடி

    டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ் செல்கிறார் மோடி.

    10:34 (IST)14 Feb 2021

    மோடி வருகையால் போக்குவரத்து மாற்றம்

    ராயபுரத்திலிருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

    09:55 (IST)14 Feb 2021

    கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

    சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதிமுக, தேமுதிக, பாமக, தமாகா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பதால் தேர்தல் கூட்டணி இறுதியாக வாய்ப்பு இருக்கிறது.

    Today's Tamil News : பிரதமர் மோடி சென்னை வருகையால் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மேலும், மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் திருப்பி விடப்படும்.
    Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment