Advertisment

PM Modi In Chennai Highlights: வேட்டி சட்டை கெட் அப்; கையில் காவி தாமரை... சென்னை தி.நகரை கலக்கிய மோடி ரோடு ஷோ

PM Modi Chennai election campaign road show Updates: சென்னையில் வாகனப் பேரணியில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி; கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு; சென்னையில் பலத்த பாதுகாப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi roadshow in coimbatore

பிரதமர் மோடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்தநிலையில், பிரதமர் மோடி பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாகனப் பேரணி மூலம் சென்னையில் வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்துவிட்டார். தற்போது 7 ஆவது முறையாக பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 9) தமிழகம் வருகிறார்.

இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகை தருகிறார். பின்னர் தியாகராய நகரில் தனது வாகனப் பேரணியை தொடங்குகிறார்.

2 கிலோ மீட்டர் வரையிலான வாகனப் பேரணியின்போது, பா.ஜ.க வேட்பாளர்கள் பால் கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), பொன்.பாலகணபதி (திருவள்ளூர்), பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு (அரக்கோணம்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவாக மோடி வாக்குசேகரிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Apr 09, 2024 20:42 IST
    காவி தாமரையை கையில் பிடித்த படி வந்த பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் வாகன பேரணி சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த பேரணியில், வேட்டி சட்டையில் பங்கேற்ற பிரதமர் மோடி, காவி தாமரையை கையில் பிடித்த படி வந்த நிலையில், அவரின் ஒவ்வொரு ரியாக்சனையும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வச்ச கண் வாங்காமல் பார்த்து வந்தார்.



  • Apr 09, 2024 20:39 IST
    மலர் தூவி உற்சாக வரவேற்பு

    பிரதமர் மோடியின் வாகன பேரணியில் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



  • Apr 09, 2024 20:38 IST
    பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி

    சென்னை வாகன பேரணியில் பிரதமர் மோடி பட்டு வேட்டி சட்டையில் பங்கேற்றுள்ளார். மேலும் சாலையின் இருபுறமும் கூறியிருக்கும் மக்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் சென்றார். மோடியை பார்த்த பா.ஜ.க தொண்டர்கள் பாரத் மாதாகீ ஜே என்று கோஷங்கள் எழுப்பினர் 



  • Apr 09, 2024 20:04 IST
    பிரதமர் மோடியின் ரோடு ஷோ தேனாம்பேட்டை சிக்னல் அருகே நிறைவு

    தேனாம்பேட்டை சிக்னல் அருகே ரோடு ஷோ நிறைவடைந்தது. இங்கிருந்து கார் மூலம் ஆளுநர் மாளிகை செல்லும் பிரதமர் மோடி, இன்றிரவு அங்கு தங்குகிறார்



  • Apr 09, 2024 19:41 IST
    பிரதமருடன் சென்னை வேட்பாளர்கள்

    பிரதமருடன் வாகனத்தில் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் உடன் இருக்கின்றனர் 



  • Apr 09, 2024 19:40 IST
    "மீண்டும் மோடி, வேண்டும் மோடி" : பா.ஜ.க தொண்டர்கள் கோஷம்

    சென்னை தி.நகரில் சரியாக 6.30 மணிக்கு துவங்கிய பிரதமரின் பேரணி, தற்போது பனகல் சாலை மா.பொ.சி சிலை அருகே வந்தடைந்தது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என தொண்டர்கள் கோசம்



  • Apr 09, 2024 18:57 IST
    சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது

    சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பாஜக வேட்பாளர்கள் பிரதமருடன் திறந்த வெளி வாகனத்தில் பயணம்



  • Apr 09, 2024 18:24 IST
    சென்னை வந்தார் பிரதமர் மோடி

    மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக, சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்



  • Apr 09, 2024 17:54 IST
    பிரதமர் மோடி வருகை : காவல்துறை கட்டுப்பாட்டில் பனகல் சாலை

    பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிப்பு



  • Apr 09, 2024 16:32 IST
    மோடி ரோட் ஷோ; போக்குவரத்து தடை

    சென்னையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெறுவதையொட்டி, பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலை வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகனம் நிறுத்தப்படுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சாலைகளில் வணிக வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 09, 2024 16:00 IST
    மோடி ரோட் ஷோ; போக்குவரத்து மாற்றம்

    சென்னையில், பிரதமர் மோடியின் வாகன பேரணி நடைபெறுவதையொட்டி ஜி.எஸ்.டி. சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணா சாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களில் இன்று பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



  • Apr 09, 2024 15:30 IST
    மோடி ரோட் ஷோ; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

    சென்னையில் பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Apr 09, 2024 15:18 IST
    மோடி ரோட் ஷோ; சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

    பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு சென்னை பெருநகரில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



Chennai Pm Modi Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment