Advertisment

கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம் - மோடி; நெல்லை பொதுக் கூட்ட ஹைலைட்ஸ்

PM Modi In Tamil Nadu BJP Nellai Meeting Updates: தேர்தல் பரப்புரைக்காக 8 ஆவது முறையாக தமிழகம் வரும் மோடி; நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi

பிரதமர் மோடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைக்காக இதுவரை 7 முறை தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

Advertisment

இந்தநிலையில், வாக்கு சேகரிப்பதற்காக 8வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடக்கும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரும் மோடி, மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார். மேலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Apr 15, 2024 19:33 IST
  பா.ஜ.க பக்கம் மொத்தத் தமிழ்நாடும் உள்ளது - மோடி

  24X7 மணி நேரமும் 2047 பற்றி தான் எனது சிந்தனை இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க.,வுக்கு பயமும், பதற்றமும் வந்துவிட்டது. பேரலை போன்ற மக்களின் ஆதரவால் பயப்படுகிறார்கள். பா.ஜ.க.,வின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் அளவுக்கு பயப்படுகிறார்கள். பா.ஜ.க தொண்டர்கள் பக்கம் மொத்தத் தமிழ்நாடும் உள்ளது என நெல்லை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார் • Apr 15, 2024 18:28 IST
  ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது தி.மு.க – மோடி

  உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. தமிழ் கலாசாரம் மீது தி.மு.க., காங்கிரசுக்கு வெறுப்பு உள்ளது. செங்கோல் விவகாரத்தில் இது உண்மையானது. குடும்ப கட்சியான காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர். புகழை தி.மு.க. அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது என நெல்லை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் • Apr 15, 2024 18:20 IST
  பா.ஜ.க தேர்தல் பிரச்சாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது - மோடி

  பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றியை கொடுத்து புதிய வரலாறு படைக்க தமிழ்நாடு தயாராக உள்ளது. உங்கள் கனவுகளே எங்கள் நோக்கங்கள். பா.ஜ.க. கூட்டணிக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என நெல்லை பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.  • Apr 15, 2024 18:07 IST
  கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம் - மோடி

  தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் தமிழ்நாட்டுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழகம் துன்பப்படுகிறது. போதைப்பொருள் விற்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என நெல்லை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார் • Apr 15, 2024 17:58 IST
  போதைப்பொருள் விற்பவர்களை நான் விடமாட்டேன் – மோடி

  போதைப்பொருள் விற்பவர்களை நான் விடமாட்டேன். போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். இளம் தலைமுறை, அடுத்த தலைமுறையை போதையில்லா பாதைக்கு பா.ஜ.க அழைத்துச் செல்லும் என நெல்லை பிரச்சார பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் • Apr 15, 2024 17:46 IST
  செங்கோல், ஜல்லிக்கட்டு இரண்டையும் தி.மு.க எதிர்த்துள்ளது - மோடி

  செங்கோலாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டாக இருக்கட்டும், தி.மு.க அதனை எதிர்த்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் ஆகியோர் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். முத்துராமலிங்க தேவர் தந்த எழுச்சியால், நேதாஜியின் ராணுவத்தில் பல இளைஞர்கள் இணைந்தனர். பா.ஜ.க.,வும், வ.உ.சி. போல தமிழகம், பாரதத்தை சுய சார்பு பாரதமாக மாற்ற விரும்புகிறது என நெல்லை பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் • Apr 15, 2024 17:33 IST
  தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலருக்கு குழப்பம் - மோடி

  தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு தொண்டு செய்ததால், அவர்களின் அன்பு எனக்கு கிடைத்திருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கத் தொடங்கியவர்கள், பா.ஜ.க.,வை நேசிக்க தொடங்கி விட்டார்கள் என நெல்லை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி கூறியுள்ளார் • Apr 15, 2024 17:26 IST
  தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது - மோடி

  இந்த கூட்டத்தை பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தென்னிந்தியாவிலும் புல்லட் ரயில் இயக்கப்படும் என பா.ஜ.க வாக்குறுதி அளிக்கிறது. தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பா.ஜ.க உறுதி பூண்டுள்ளது என நெல்லை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் • Apr 15, 2024 16:57 IST
  நெல்லை வந்தடைந்தார் மோடி

  மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். • Apr 15, 2024 16:23 IST
  மோடி பொதுக்கூட்டம்; ஐ.ஜி தலைமையில் பாதுகாப்பு

  பிரதமர் மோடி கலந்துக் கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு தென் மண்டல போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கண்ணன் தலைமையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 டி.ஐ.ஜிக்கள், 12 எஸ்.பிக்கள் மற்றும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிககளில் ஈடுபட்டுள்ளனர். Tirunelveli Pm Modi Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment