scorecardresearch

சென்னையில் புதிய முனையம்.. மார்ச் 27 நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சென்னையில் புதிய முனையம்.. மார்ச் 27 நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் செலவில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், ஓராண்டில் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து, பயணிகளின் உடமைகளைக் கையாள்வதற்கும், விரைவாகச் சரிபார்ப்பதற்கும், உடமைகளை அனுப்புவதற்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அவை கடந்த வாரத்தில் சோதனை செய்யப்பட்டன.

பிரதமர் மோடி மார்ச் 27-ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். மதுரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் சென்னை வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pm modi inaugurate integrated terminal at chennai airport