/tamil-ie/media/media_files/uploads/2019/10/EGnO5fvUYAEGWaf.jpg)
PM mamallapuram poem Tamil Translataion , mamalapuram china president visit
இந்திய – சீனா நாடுகளின் தலைவர்களின் முறைசாரா சந்திப்பு மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் நடந்தது. இந்தியா, சீனாவின் இருதரப்பு உறவுகளில் இருக்கும் வரலாற்று ரீதியிலான உறவுகளை பிரதிபலிப்பதாகவே இந்த மாமல்லபுர சந்திப்பு இருந்தது. மேலும், முறைசாரா சந்திப்பில் இந்தியப் பிரதமர் தமிழ் வேஷ்டி,சட்டை அணிந்ததும், சீனா அதிபர் ஜீ ஜின்பிங் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை வெகுவாக பாராட்டியதும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கியது
சில, நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடி இந்த பயணத்தை குறித்த அனுபவங்களை இந்தி மொழியில் கவிதையாய் வடித்து ட்விட்டரில் பதிவு செய்தார். அக்கவிதையில், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடல் உடனான உரையாடலில் - தன்னையே தொலைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
Here is a Tamil translation of the poem I wrote while I was at the picturesque shores of Mamallapuram a few days ago. pic.twitter.com/85jlzNL0Jm
— Narendra Modi (@narendramodi) October 20, 2019
தற்போது, அந்த கவிதையின் தமிழ் மொழியாக்கம் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அலைகடலே அடியேனின் வணக்கம் ! என்று ஆரம்பித்து , புகழுக்கு ஏங்காதே, புகலிடத்தை நாடாதே பலனை எதிர்நோக்காதே என்ற பொருளை உணர்த்தி, மீண்டும் அலைகடலே அடியேனின் வணக்கம்! என்பதோடு அக்கவிதை முடிவடைகிறது.
முழுக் கவிதை இங்கே படிக்கலாம் -
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.