கன்னியாகுமரியில் காணும் இடங்களில் எல்லாம் காவல்துறை வாகனங்களின் வரிசை, காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 4000 காவலர்கள் பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதை கன்னியாகுமரி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை கால நிலை மாற்றம் போல் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.
சுவாமி விவேகானந்தர், 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறைக்கு நீந்திச் சென்று அந்த பாறையில் மூன்று நாட்கள் தவம் இருந்தது ஒரு வரலாற்று நிகழ்வு.
பிரதமர் மோடி கடந்த காலங்களில் 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்த பின், உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கர், இமயமலையிலுள்ள கேதர்நாத் குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார்.
இந்தியாவில் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் தினமான ஜூன் 1 ஆம் தேதி 57 இடங்களில் கடைசி கட்டத்தில் தேர்தல் நடக்கும் நாளில், இந்தியாவின் தென் கோடி முனையான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு தியானம் மண்டபத்தில் மூன்று நாட்கள் (45) பிரதமர் மோடி தவம் மேற்கொள்ள போகிறார்.
பிரதமர் மோடி இன்று மாலை 5.45 மணிக்கு ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே உள்ள இடத்தில் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார்.
பிரதமர் ஹெலிகாப்டர் இறங்கிய திடலிலே முக்கிய பிரமுகர்களை சந்தித்த பின், அங்கிருந்து நேரடியாக கன்னியாகுமரி தேவி பகவதியம்மன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு துறையில் இருந்து படகு மூலம் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் தியானம் அரங்கு பகுதிக்கு செல்கிறார். தியான அரங்கு இதுவரை குளிரோட்டம் செய்யப்படாத பகுதியாக இருந்த நிலையில், பிரதமரின் தியானம் நிகழ்விற்காக குளிரோட்டம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்ளும் 45 மணி நேரம், பிரதமருடன் அவரது பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள். தியான நேரத்தில் பிரதமர் இளநீர், நுங்கு, எலுமிச்சை பழம் நீரை மட்டுமே உணவாக உட்க்கொள்வாராம்.
பிரதமர் மோடி 45 மணி நேரம் தியானத்தை முடித்து விட்டு படகு மூலம் படகுதுறைக்கு வரும் பிரதமர் மோடி பாதுகாப்பு படையினருடன் ஹெலிகாப்டர் திடல் வரை சாலை வழியாக பயணிக்கிறார். இந்த நிகழ்வுகளின் நிறைவுக்கு பின்னால் மாலை 5 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான தளத்திற்கு செல்கிறார்.
த.இ.தாகூர்., கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“