Advertisment

PM Modi in Kanniyakumari Highlights: 3 நாள், 45 மணி நேர தியானம்; நிறைவு செய்த மோடி

PM Modi in Kanniyakumari Live Updates: கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi kumari

கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி 3வது நாளாக இன்று தியானத்தை தொடர்கிறார்.

Advertisment

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்த பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் தியான அறையில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி சூரிய வழிபாடு செய்தார்.

பின்னர், விவேகானந்தர் மண்டபம் சென்ற பிரதமர், விவேகானந்தர் சிலைமுன்பு தரையில் அமர்ந்து சுமார் அரைமணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார்

தொடர் தியானத்துக்கு இடையே தியான மண்டபத்தை ஒட்டிய அறையில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டார். இளநீர், பழச்சாறு மட்டும் அருந்தினார். திட உணவுகள் எதுவும் சாப்பிடவில்லை.

சுமார் 5 மணி நேரத்துக்கு ஒருமுறை தியானம் முடிந்து ஓய்வெடுக்க அறைக்கு வரும்போது, பிரதமரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

3 நாட்களாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் தியானத்தை பிரதமர் மோடி இன்றுமாலை 4 மணி அளவில் நிறைவு செய்கிறார். பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கரை பகுதிக்கு வந்து, ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

  • Jun 01, 2024 15:33 IST
    திருவள்ளுவர் சிலைக்கு மோடி மரியாதை

    கன்னியாகுமரியில் தியானத்தை முடித்துக் கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் பிரதமர் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 



  • Jun 01, 2024 15:17 IST
    45 மணி நேர தியானம்  - நிறைவு செய்த மோடி

    கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக (மே 30, 31 மற்றும் ஜூன்1) பிரதமர் மோடி தியானம் மேற்கொண்ட நிலையில், இன்று தனது தியானத்தை நிறைவு செய்தார். 

    சரியாக பிற்பகல் 2.45 மணிக்கு சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து வெளியே வந்தவர் விவேகானந்தர் பெயர் கொண்ட படகில் ,உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்றார். சிலையின் முன் சில நொடிகள் கண் மூடி நின்றவர் அதன் பின் திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி வணங்கினார். 

    மீண்டும் விவேகானந்தர் பெயர் கொண்ட படகில் ஏறி பூம்புகார் கப்பல் போக்குவரத்தின் படகு துறைக்கு வந்தார். குண்டு துளைக்காத நவீன வாகனத்தில் அரசு விருந்தினர் மாளிகை முன் பக்கம் உள்ள ஹெலிகாப்டர் தளம் சென்றார்.



  • Jun 01, 2024 12:19 IST
    மோடி தியானம்; விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

    பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறார். இதனையடுத்து 11 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு திரும்பி வந்த பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என பூம்புகார் படகு கழகம் அறிவித்துள்ளது



  • Jun 01, 2024 12:00 IST
    மோடியின் கேதார்நாத் தியானம்

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, இமயமலையில் கேதார்நாத் குகையில், மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் மோடி தியானம் மேற்கொண்டார். அது வட இந்தியாவின் எல்லைப்பகுதியை ஒட்டியது.



  • Jun 01, 2024 11:51 IST
    விவேகானந்தர் பாறையில் இருந்து காட்சிகள்

    கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து காட்சிகள். சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில், தியானம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 30 ஆம் தேதி இங்கு வந்தார்.



  • Jun 01, 2024 11:31 IST
    விவேகானந்தர் பாறையை சிறப்பு புகலிடமாக மாற்றியது என்ன?

    பரந்து விரிந்த பெருங்கடலின் நடுவே ஒரு பாறையின் மீது வீற்றிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வரலாற்றில் தனித்த இடமுண்டு1970 இல் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம் இந்திய கட்டிடக்கலை மரபுகளின் அழகிய சங்கமத்தை பிரதிபலிக்கிறது. நினைவுச் சின்னத்திற்கு அப்பால் இது, சுவாமி விவேகானந்தரின் போதனைகளின் களஞ்சியமாக செயல்படுகிறது. 

    விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரிக்கு செல்லும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.

    விவேகானந்தர் பாறையை சிறப்பு புகலிடமாக மாற்றியது என்ன?



  • Jun 01, 2024 11:01 IST
    மோடியின் பிரதாப்கர் தியானம்

    இந்தியாவின் வடகிழக்கில் பிரதாப்கர் என்னும் பகுதி இருக்கிறது. அங்குதான் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். இது நேபாளத்துக்கு அருகில் இருக்கும் எல்லைப் பகுதி.



  • Jun 01, 2024 10:23 IST
    இரவிலும் தியானத்தைத் தொடரும் மோடி

    இரவிலும் தியானத்தைத் தொடரும் மோடி விடிய விடிய தியானம் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. தியான மண்டபத்துடன் ஒட்டிய ஓய்வறையில் அவ்வப்போது ஓய்வெடுத்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளநீர், மற்றும் பழச்சாறுகளை அவர் உணவாக உட்கொண்டு வரும் நிலையில் தியானம் முடிந்து அவர் ஓய்வெடுக்க அறைக்கு வரும்போது மருத்துவர்கள் அவரது உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர்.



  • Jun 01, 2024 09:53 IST
    3 நாட்களாக தொடர்ந்து தியானம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி

    கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்களாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் தியானத்தை பிரதமர் மோடி இன்று மாலை 4 மணி அளவில் நிறைவு செய்கிறார். பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கரை பகுதிக்கு வந்து, ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.



  • Jun 01, 2024 09:05 IST
    விவேகானந்தர் தவம் செய்த பாறை

    கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக் கடலில் உள்ள பாறையில் தவம் செய்தார். விவேகானந்தரின் ஆன்மிக வாழ்க்கையில் இந்தத் தியானம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.



  • Jun 01, 2024 08:28 IST
    கன்னியாகுமரியில் தொடரும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

    பிரதமர் மோடியில் தியானத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்திய கடற்படையினர், மெரைன் போலீஸார், விமானப்படை வீரர்கள், மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்திய கடற்படையை சேர்ந்த இரு கப்பல்களில் கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றியவாறு உள்ளனர்.



  • Jun 01, 2024 07:44 IST
    அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க மோடி வேண்டுகோள்

    2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இளம் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஒன்றாக, நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பாக ஆக்குவோம்.



  • Jun 01, 2024 07:04 IST
    மீன்பிடி படகுகள் செல்ல தடை

    பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் நேற்றும் தொடர்ந்தன. கன்னியாகுமரி கடலில் 3 நாட்டிக்கல் மைல் தூரம் வரை மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கன்னியாகுமரி பகுதியில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மற்ற பகுதிகளில் மீன்பிடி பணிகள் வழக்கம்போல நடைபெற்றன.



  • May 31, 2024 13:44 IST
    விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் - வீடியோ, புகைப்படம் வெளியீடு

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 2-வது நாளாக பிரதமர் மோடி இன்றும் தியானம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிகாலையில் தியானத்திற்கு முன் பிரதமர் மோடி சூரிய உதயத்தை கண்டுகளித்து சூரிய பகவானை வணங்கினார். பின்னர் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்றபடி பிரதமர் மோடி பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார்.

     



  • May 31, 2024 11:54 IST
    பாதுகாப்பு பணியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார்

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கடல், வான் மற்றும் தரைவழியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், இந்தப் பாறைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மெரைன் போலீஸாரும், கமாண்டோ நீச்சல் வீரர்களும் இரவும், பகலும் ரப்பர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்

    இதுதவிர, இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்



  • May 31, 2024 11:36 IST
    கடற்கரை சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

    கன்னியாகுமரி, அரபிக்கடல் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக நிரோடி - பொழியூர் செல்லும் கடற்கரை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2024 11:07 IST
    தியானத்துக்கு நடுவே 5 மணி நேரம் ஓய்வு எடுக்கும் மோடி

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நேற்றிரவு 7 மணிக்கு பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து 5 மணி நேரம் தியானம், அதன் பிறகு சிறிது ஓய்வு என நாளை மாலை வரை 45 மணி நேரத்துக்கு தொடர் தியானத்தை பிரதமர் மேற்கொள்கிறார். 5 மணி நேரத்துக்கு ஒருமுறை எடுக்கும் ஓய்வைத் தவிர, பிரதமர் தூங்கப் போவதில்லை. ஓய்வு சமயத்தில் இளநீர், பழச்சாறு மட்டும் அருந்துகிறார் 



  • May 31, 2024 10:36 IST
    விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நேற்றிரவு 7 மணிக்கு பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து 5 மணி நேரம் தியானம், அதன் பிறகு சிறிது ஓய்வு என நாளை மாலை வரை 45 மணி நேரத்துக்கு தொடர் தியானத்தை பிரதமர் மேற்கொள்கிறார்.



  • May 31, 2024 10:19 IST
    விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்யும் வீடியோ



  • May 31, 2024 10:17 IST
    விவேகானந்தர் பாறையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானம்

    132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார்.



  • May 31, 2024 10:14 IST
    பிரதமர் மோடி சூரிய தரிசன வழிபாடு- வீடியோ



  • May 31, 2024 10:11 IST
    பிரதமர் மோடி சூரிய தரிசன வழிபாடு

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் மோடி இன்று சூரிய தரிசன வழிபாடு செய்தார்.



  • May 31, 2024 09:00 IST
    வெள்ளை வேஷ்டியில் கோயில் பிரகாரத்தை சுற்றிவந்த மோடி

    பிரதமர் மோடி வியாழக்கிழமை மாலை கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் மண்டபத்தில் தனது 45 மணி நேர தியானத்தைத் தொடங்கினார்.

    அர்ச்சகர்கள் சிறப்பு 'ஆர்த்தி' செய்து அவருக்கு சால்வை மற்றும் கோவிலின் மூலஸ்தானத்தின் புகைப்படம் அடங்கிய கோவில் 'பிரசாதம்' வழங்கினர்.



  • May 31, 2024 08:36 IST
    விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    சுற்றுலா பயணிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விவேகானந்தர் பாறைக்கு  செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்பட்டது.



  • May 31, 2024 08:12 IST
    விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து காலை காட்சிகள்



  • May 31, 2024 07:47 IST
    காவி உடையில் பிரதமர் மோடி இன்று சூரிய தரிசன வழிபாடு

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் மோடி இன்று சூரிய தரிசன வழிபாடு செய்தார்.

    இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் சோதனைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விவேகானந்தர் பாறைக்கு  செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்பட்டது.



  • May 31, 2024 07:15 IST
    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானம்

    கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். குமரி சுற்றுலா மையங்கள் அனைத்தும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது.



  • May 31, 2024 07:15 IST
    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானம்

    கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். குமரி சுற்றுலா மையங்கள் அனைத்தும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது.



  • May 30, 2024 21:12 IST
     முப்படை காணிப்பு வளையத்தில் விவேகானந்தர் மண்டபம்

    குமரியில் மோடி தியானம் மேற்கொள்ளும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி பகுதி  காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறி, குமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சிறப்பு காவல்துறை, கடலோர காவல்படை, முப்படைகளின் கண் காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.



  • May 30, 2024 20:41 IST
    சாரதா தேவி புகைப்படங்களுக்கு மோடி மலர் தூவி மரியாதை!  

    குமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி ராமகிருஷ்ண பரமஹம்சர், `அன்னை' சாரதா தேவியின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி வணங்கினார். 



  • May 30, 2024 19:04 IST
    விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தியானம் 

    சுவாமி விவேகானந்தர் தியானம் மண்டபத்தில் பிரதமர் மோடி தனது 45 மணி நேரம் தியானத்தை சரியாக 6 45 மணிக்கு தொடங்கினார். இரு பாதுகாப்பு பணியினர் மட்டுமே  அந்த பகுதியில் உள்ளனர்.



  • May 30, 2024 18:23 IST
    விவேகானந்தர் மண்டபத்திற்குள் செல்லும் மோடி!

    பிரதமர் மோடி பகவதி அம்மன் தரிசனத்திற்கு பின், படகில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றவர். முதலில் தேவி பாத மண்டபத்திற்கு சென்று பகவதி அம்மனின் கால் தடத்தை வணங்கி விட்டு விவேகானந்தர் சிலை மண்டபத்திற்குள் செல்கிறார்.

     



  • May 30, 2024 18:06 IST
    குமரி வந்த மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வருகிறார். சாமி தரிசனம் செய்தபின், படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார் 



  • May 30, 2024 17:42 IST
    பகவதி அம்மன் கோயிலில் மோடி தரிசனம் 

    3 நாள் பயணமாக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக குமரி வந்தடைந்தார், பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். 

    தரிசனம் செய்தபின், பிரதமர் மோடி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார். அங்கேயே இன்று முதல் 3 நாட்களுக்கு தாங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார்.



  • May 30, 2024 17:17 IST
    கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி!

    3 நாள் பயணமாக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்





  • May 30, 2024 16:38 IST
    மோடி கன்னியாகுமரி வருகை; நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவு

    விவேகானந்தர் பாறையின் புனிதத்தன்மை - கன்னியாகுமரி அம்மன் அதன் மீது தவம் செய்துள்ளார். அம்மனின் புனிதப் பாதங்கள் அங்கு பதிந்துள்ளன. சிகாகோ செல்வதற்கு முன், சுவாமி விவேகானந்தர் இங்கு தவம் செய்தார். ராமகிருஷ்ண மடத்துடன் பிரதமர் மோடியின் நல்லுறவு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏக்நாத் ரானடே அவர்களின் சீரிய முயற்சியால் இந்த நினைவிடம்  கட்டப்பெற்றது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்



  • May 30, 2024 14:50 IST
    கன்னியாகுமரியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு

    3 நாள் பயணமாக இன்று மாலை கன்னியாகுமரிக்கு வருகிறார். பிரதமர் மோடி பிரதமர் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியானத்தின் போது, 3 நாட்கள் விரதத்தை கடைபிடிக்கிறார், பிரதமர் மோடி பிரதமர் வருகையை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில் 3 நாட்கள் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது



  • May 30, 2024 13:50 IST
    காவல்துறை கட்டுப்பாட்டில் பகவதி அம்மன் கோயில்

    பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 



  • May 30, 2024 13:34 IST
    3 நாட்கள் மோடி நீர் ஆகாரம் மட்டுமே அருந்துவார் என தகவல்

    கன்னியாகுமரி தியானத்தின் போது, 3 நாட்கள் விரதத்தை கடைபிடிக்கிறார், பிரதமர் மோடி நீர் ஆகாரம் மட்டுமே அருந்துவார் என கூறப்படுகிறது



kanniyakumari Pm Modi Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment